கம்பராமாயணம் 8911 · யுத்த 25.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1கை அகல் இஞ்சிக் காவல் கலங்க
செய்ய கொழுந்தீச் சென்று நெருங்க
ஐயன் நெருங்கார் ஆழியை அம்பால்
எய்ய எரிந்தால் ஒத்தது இலங்கை.
பொருள் · Meaning in Tamil
கை அகல் இஞ்சிக் காவல் கலங்க - இடமகன்ற கோட்டை மதிற் காவல் கலங்குமாறு; செய்ய கொழுந் தீ சென்று நெருங்க - சிவந்த கொழுவிய நெருப்பானது சென்று நெருங்குவதால்; இலங்கை - இலங்கை நகரமானது; ஐயன் நெடுங்கார் ஆழியை அம்பால் - இராமன், நெடிய கருங்கடலைத் தனது கணைகளால்; எய்ய எரிந்தால் ஒத்தது - எய்த காலத்து எரிந்த தோற்றம் போல் காட்சியளித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the guard of the broad fortress walls was thrown into turmoil
- and the red, thick flames advanced and closed in,
- Ilaṅkai looked like the vast dark ocean
- when the lord shot it with his arrows and it burned.
What the poem says
Ilaṅkai's wide walls and their guards are in chaos as the fire spreads. The burning city resembles the dark ocean as it blazed when Irāmaṉ shot his arrows into it earlier in the war, the same episode recalled in the previous verse.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kai akal iñcik kāval kalaṅka
ceyya koḻun tīc ceṉṟu neruṅka
aiyaṉ neṭuṅ kār āḻiyai ampāl
eyya erintāl ottatu ilaṅkai.