கம்பராமாயணம் 8912 · யுத்த 25.25

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பரல்துறு தொல் பழுவத்து எரிபற்ற
நிரல்துறு பல்பறவைக் குலம் நீளம்
உரற்றின விண்ணின் ஒலித்து எழும்வண்ணம்
அரற்றி எழுந்தது அடங்க இலங்கை.

பொருள் · Meaning in Tamil

பரல் துறு தொல்பழுவத்து எரி பற்ற - பரற்கற்கள் நெருங்கியுள்ள பழமையான காட்டில் தீ பற்றிக் கொள்ள; நிரல் துறு பல் பறவைக் குலம் - வரிசையாக நெருங்கி வாழ்கின்ற பலபறவைக் கூட்டங்கள்; நீளம் உரற்றின விண்ணின் ஒலித்து எழும் வண்ணம் - தம் கூட்டின் முன்பு அரற்றினவாய்ப் பின்பு வானத்தில் ஒலித்துக் கொண்டு எழுந்தது போல; இலங்கை அடங்க அரற்றி எழுந்தது - இலங்கை நகர அரக்கர் கூட்டம் முழுவதும் புலம்பிக்கொண்டு எழுந்தது.

நீளம் - கூடு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As when fire seizes an ancient forest thick with pebbles
  2. and the many flocks of birds crowded there in rows
  3. cry out at their nests and rise screaming into the sky,
  4. so the whole of Ilaṅkai rose up wailing.

What the poem says

The rākṣasas of Ilaṅkai wake to the fire and rise up lamenting. The poet compares them to flocks of birds in an old, stony forest that has caught fire: they shriek at their nests and then fly up into the sky crying. The word nīḷam here means 'nest'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1param tuṟu tol paḻuvattu eri paṟṟa
niral tuṟu pal paṟavaik kulam nīḷam
uraṟṟiṉa viṇṇiṉ olittu eḻum vaṇṇam
araṟṟi eḻuntatu aṭaṅka ilaṅkai.