கம்பராமாயணம் 8916 · யுத்த 25.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1மேல்திசை வாயிலை மேவிய வெங்கண்
காற்றின் மகன்தனை வந்து கலந்தான்
மாற்றல் இல் மாயம் வகுக்கும் வலத்தான்
கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான்.
பொருள் · Meaning in Tamil
மாற்றல் இல் மாயை வகுக்கும் வலத்தான் - மாற்றமுடியாத மாயத்தைச் செய்யும் வலிமை பெற்றவனும்; கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான் - எமனையும் வெற்றிகொண்டு உயர்ந்த வெற்றி உலாவை மேற்கொண்டவனுமாகிய இந்திரசித்தன்; மேல்திசை வாயிலை மேவிய வெங்கண் - மேலை வாயிலை அடைந்த கொடிய கண்ணையுடைய; காற்றின் மகன்தனை வந்து கலந்தான் - காற்றின் மகனாகிய அனுமனை வந்து நெருங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To the fierce-eyed one who held the western gate,
- the son of the wind, came close
- he who has the power to work magic none can undo,
- who has conquered even Death and made his lofty victory round.
What the poem says
Intiracittaṉ, master of illusions no one can counter, who once defeated even Yama the god of death, comes to the western gate of Ilaṅkai, which Aṉumaṉ is guarding. He approaches Aṉumaṉ to carry out the plan of the phantom Cītai.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mēl ticai vāyilai mēviya veṅ kaṇ
kāṟṟiṉ makaṉtaṉai vantu kalantāṉ
māṟṟal il māyai vakukkum valattāṉ
kūṟṟaiyum veṉṟu uyar vaṭṭaṇai koṇṭāṉ.