கம்பராமாயணம் 8917 · யுத்த 25.30

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சானகி ஆம்வகை கொண்டு சமைத்து ஓர்
மான் அனையாளை வடிக்குழல் பற்றா
ஊன்நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான்
ஆனவன் அந்நிலை இன்ன அறைந்தான்.

பொருள் · Meaning in Tamil

சானகி ஆம் வகை கொண்டு சமைத்த - சீதையாகும் வண்ணம் மாயை கொண்டு உருவாக்கிய; மான் அனையாளை வடிக்குழல் பற்றா - ஒருமான் போன்ற (மருட்சியை உடைய) பெண் ஒருத்தியின் திருந்திய கூந்தலினைப் பற்றியவனாய்; ஊன் நகு வாள் ஒரு கைக் கொடு உருத்தான் - மற்றொருகையால் தசை விளங்குகின்ற வாளினைப் பற்றியவனாய்ச் சினங்கொண்டு; ஆனவன் இன்னன சொற்கள் அறைந்தான் - தனது எண்ணத்தை நிறைவேற்ற முனைந்தவனாய் இத்தகைய சொற்களைச் சொல்லத் தொடங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seizing by her well-dressed hair the doe-like woman
  2. he had fashioned to be Cāṉaki,
  3. holding in his other hand a sword gleaming with flesh, he raged,
  4. and, bent on his purpose, there he spoke these words.

What the poem says

Intiracittaṉ appears holding the illusory Cītai by her hair, a frightened woman like a doe, and in his other hand a sword stained with flesh. Set on carrying out his scheme, he begins to speak to Aṉumaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cāṉaki āmvakai koṇṭu camaitta
māṉ aṉaiyāḷai vaṭik kuḻal paṟṟā
ūṉ naku vāḷ oru kaikkoṭu uruttāṉ
āṉavaṉ annilai iṉṉaṉa coṟkaḷ aṟaintāṉ.