கம்பராமாயணம் 8926 · யுத்த 25.39

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'போமின் அடா! வினை போயது போலாம்?
ஆம் எனில் இன்னும் அயோத்தியை அண்மி
காமின்; அது இன்று கனல்கரி ஆக
வேம்; இது செய்து இனி மீள்குவென் 'என்றான்.

பொருள் · Meaning in Tamil

அடா! வினை போயது போலாம்? - அடா குரங்கே! என் செய்கை இவள் கொலையோடு முடிந்துவிட்டதோ? (இல்லை); போமின், ஆம் எனில் இன்னும் அயோத்தியை அண்மி - நீங்கள் எல்லாம் செல்லுங்கள் உங்களால் ஆகும் என்றால் அயோத்தியை நெருங்க; காமின் அது இன்று கனல் கரி ஆக வேம் - காவல் செய்யுங்கள்; அந்த அயோத்தி நகரம் இன்று நெருப்பில் கரியாக வேகப் போகின்றது; அது செய்து இனி மீள்குவென் என்றான் - அந்தச் செயலைச் செய்துவிட்டு இப்போதே மீள்வேன் என்று கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Go, fellow! Do you think my work ends here?
  2. If you can, go now, draw near to Ayōttī
  3. and guard it; today it will burn
  4. to charcoal in the fire; I will do that and then return,' he said.

What the poem says

Intiracittaṉ tells Aṉumaṉ that killing Cītai is only the beginning. He dares the monkeys to hurry to Ayōttī and guard it if they can, for he will burn Irāmaṉ's city to cinders that very day and then come back.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pōmiṉ aṭā! viṉai pōyatu pōlām?
ām eṉil iṉṉum ayōttiyai aṇmi
kāmiṉ; atu iṉṟu kaṉal kari āka
vēm; atu ceytu iṉi mīḷkuveṉ 'eṉṟāṉ.