கம்பராமாயணம் 8927 · யுத்த 25.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1தம்பியர் தம்மொடு தாயரும் ஆயோர்
உம்பர் விலக்கிடினும் இனி உய்யார்;
வெம்பு கடுங்கனல் வீசிடும் என்கை
அம்புகேளாடும் அவிந்தனர் அம்மா!
பொருள் · Meaning in Tamil
தம்பியர் தம்மொடு தாயரும் ஆயோர் - (இராமனுக்கு) தம்பியரும், தாயரும் ஆகிய அனைவரும், உம்பர் விலக்கிடினும் இனி உய்யார் - இனித்தேவர்களே வந்து தடுத்தாலும் பிழைக்கமாட்டார்கள்; வெம்பு கடுங்கனல் வீசிடும் என்கை - வெம்புகின்ற கடுமையான கனலை வீசுகின்ற எனது கையிலுள்ள; அம்புகளோடும் அவிந்தனர் - கணைகளால் இறந்தவரே ஆவார்
அம்மா - வியப்பை சொலி
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'His younger brothers, together with his mothers, all of them,
- will not survive now, even if the gods should intervene;
- with the arrows of my hand that hurl scorching, fierce fire
- they are as good as dead, mark it!'
What the poem says
Intiracittaṉ boasts that Irāmaṉ's brothers and mothers in Ayōttī are doomed: not even the gods could save them from his fire-spewing arrows. He speaks of their death as already accomplished. The closing ammā is an exclamation of emphasis.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tampiyartammoṭu tāyarum āyōr
umpar vilakkiṭiṉum iṉi uyyār;
vempu kaṭuṅ kaṉal vīciṭum eṉ kai
ampukaḷōṭum avintaṉar ammā!