கம்பராமாயணம் 8931 · யுத்த 25.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
போய் அவன் மாறி நிகும்பலை புக்கான் - அயோத்தி நோக்கிப் போவதாகக் காட்டிய இந்திரசித்து அத்திசை மாறி நிகும்பலை என்னும் கோயிலுள் புகுந்தான்; தூயவன் நெஞ்சு துயர்ந்து சுருண்டான் - வஞ்சனையை உணரவியலாத தூயவனாகிய அனுமன் மனம் வருந்திச் சுருண்டு விழுந்தான்; நெஞ்சம் ஓய்வொடு ஒடுங்க உலர்ந்தான் - (அங்ஙனம் வீழ்ந்தவனுடைய) நெஞ்சம் ஓய்தலோடு தளர்ச்சியடைய உடலும் உலர்ந்து காய்பவனானான்; ஏயன பன்னினன் இன்னன சொன்னான் - (மேலும்) தன் மனத்தில் தோன்றியதைச் சொல்லத் தொடங்கி இத்தகைய சொற்களைச் சொல்லலானான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He went, then turned aside and entered Nikumpalai;
- the pure one, his heart in anguish, lay curled up;
- his heart sinking in exhaustion, he withered;
- then, voicing what came to him, he spoke these words.
What the poem says
Having feigned a flight toward Ayōttī, Intiracittaṉ doubles back and enters the shrine of Nikumpalai to begin his sacrifice. Aṉumaṉ, too pure-hearted to suspect a trick, lies curled up in grief, his spirit drained and his body parched. Then he begins to pour out his lament.