கம்பராமாயணம் 8933 · யுத்த 25.46

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எழுந்து அவன் மேலே பாய எண்ணும்; பேர் இடரைத் தள்ளி;
விழுந்துவெய்து உயிர்த்து விம்மி வீங்கும்; போய் மெலியும்; வெந் தீக்
கொழுந்துகள் உயிர்க்கும்; யாக்கை குலைவுறும்; தலையே கொண்டு உற்று
உழும்தரை தன்னை; பின்னை இனையன உரைப்பது ஆனான்.

பொருள் · Meaning in Tamil

எழுந்து அவன் மேலே பாய எண்ணும் - (பிறகு) எழுந்து அவ்விந்திரசித்துவின் மேலே பாயலாமா? என எண்ணுவான்; பேர் இடரில்தள்ளி விழுந்து வெய்து உயிர்த்து விம்மி வீங்கும் - தான் பெருந்துன்பத்தில் தள்ளிவிடப் பட்டவனாக விழுந்து, வெம்மையான பெருமூச்சு விட்டு திணறி முகம் வீங்குவான்; போய் மெலியும் வெந்தீக் கொழுந்துகள் உயிர்க்கும் - அந்நிலைபோய் மெலிவுறுவான் வெப்பமான அனற்கொழுந்துகளையே உயிர்ப்பான்; யாக்கை குலைவுறும் - உடல் நடுங்குவான்; தலையே கொண்டுற்று தரை தன்னை உழும் - தன் தலையையே கொண்டு தரையைப் பொருந்தி உழுவான்; பின்னும் இனையன உரைப்பதானான் - பின்னர் இத்தன்மையான சொற்களைச் சொல்லலானான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He would think to rise and leap upon him; thrust into great distress,
  2. he would fall, breathe hot sighs, sob and swell; then grow faint; tongues
  3. of fierce fire he would breathe out; his body would shake; pressing his very head
  4. he would plough the ground; and again he began to say such things.

What the poem says

Aṉumaṉ's grief shows itself in frantic alternation. He thinks of springing on Intiracittaṉ, falls back crushed, sighs hotly and sobs, grows weak, breathes out what seem like flames, trembles, and grinds his head against the earth as if ploughing it. Then he resumes his lament.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻuntu avaṉmēlē pāya eṇṇum; pēr iṭaril taḷḷi;
viḻuntu veytu uyirttu vimmi vīṅkum; pōy meliyum; ventīk
koḻuntukaḷ uyirkkum; yākkai kulaivuṟum; talaiyē koṇṭuṟṟu
uḻum taraitaṉṉai; piṉṉum iṉaiyaṉa uraippatāṉāṉ.