கம்பராமாயணம் 8934 · யுத்த 25.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முடிந்தது நம் தம் எண்ணம் - நமது எண்ணம் முடிந்தது; ‘மூஉலகிற்கும் கங்குல் விடிந்தது’ என்று இருந்தேன் - மூன்று உலகங்கட்கும் துன்ப இருள் விடிந்தது என்று இருந்தேன்; மீள வெந்துயர் இருளின் வெள்ளம் படிந்தது - மீளவும் கொடிய துன்பமாகிய இருளின் பெருக்கு வந்து படிந்தது; வினையச் செய்கை பயந்தது - வஞ்சகச் செய்கையே பயனளித்து விட்டது; பாவி! வாளால் தடிந்தனன் திருவை! - பாவியாகிய இந்திரசித்து திருமகளின் அமிசமான சீதையை வெட்டி வீழ்த்தி விட்டான்; அந்தோ தருமம் தவிர்ந்தது - அந்தோ தருமம் தவிர்ந்து விட்டதே.
அந்தோ - இரக்கக் குறிப்பு, அம்மா - உரையசை: வியப்பிடைச் சொல் எனினுமாம். நிகழாதது நிகழ்ந்ததால் வியப்பாயிற்று. இனி வரும் பாடல்களிலும் ‘அம்மா'வுக்கு இங்ஙனமே உரைக்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- '"Our purpose is achieved; for the three worlds the night
- has dawned," so I believed; but again a flood of the darkness of cruel grief
- has settled down; treachery has borne its fruit; the sinner with his sword
- has cut down Tiru herself! Alas, righteousness has vanished!'
What the poem says
Aṉumaṉ had believed the long night of suffering for the three worlds was ending and their goal was in reach. Now a flood of darkness has returned: deceit has triumphed, and the wicked prince has slain Cītai, an incarnation of Tiru (Lakṣmī), goddess of fortune. With her death righteousness itself seems to have left the world. The final ammā expresses astonishment that the unthinkable has happened.