கம்பராமாயணம் 8935 · யுத்த 25.48

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பெருஞ்சிறைக் கற்பினாளைப் பெண்ணினைக் கண்ணின் கொல்ல,
இருஞ்சிறை அற்ற புள்போல், யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன்;
இருஞ்சிறை அமுங்கு கின்றேன்; எம்பிரான் தேவி பட்ட
அருஞ்சிறை மீட்ட வண்ணம் அழகிது பெரிதும் அம்மா.

பொருள் · Meaning in Tamil

பெருஞ்சிறைக் கற்பினாளைப் பெண்ணினைக் - பெரியகாவலாகிய கற்பினை உடையசீதையை, பெண்ணினை; கண்ணின் கொல்ல - என்கண்முன்னால் கொல்லவும்; இருஞ்சிறகு அற்ற புள்போல் - பெரிய சிறகுகளை இழந்த பறவையபோல; யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன் - யாதொன்றும் செய்ய இயலாதவனாய் இருந்து; இருஞ்சிறை அழுந்துகின்றேன் - பெரிய துன்பச்சிறையில் அழுந்துகின்றேன்; எம்பிரான் தேவிபட்ட - எம்பெருமானாகிய இராமன் மனைவியை அவள் அகப்பட்டிருந்த; அருஞ்சிறை மீட்டவண்ணம் அழகிது பெரிதும், அம்மா - பொறுத்தற்கரிய சிறையிலிருந்து மீட்ட வண்ணம் அம்மா மிகவும் அழகிது!

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'While the woman whose chastity is her great guard was killed before my eyes,
  2. like a bird stripped of its broad wings I could do nothing at all;
  3. I sink into a deep prison of grief; and the way I rescued my lord's queen
  4. from the cruel prison she suffered is splendid indeed!'

What the poem says

Aṉumaṉ bitterly mocks himself. Cītai, whose chastity was her surest protection, was killed in front of him while he stood helpless as a bird with clipped wings. Now he is the one in a prison of sorrow. He says with savage irony that this is a fine way to have 'freed' his master's wife from captivity.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'peruñ ciṟaik kaṟpiṉāḷaip peṇṇiṉaik kaṇṇiṉkolla,
iruñ ciṟaku aṟṟa puḷ pōl, yātum oṉṟu iyaṟṟal āṟṟēṉ;
iruñ ciṟai aḻuntukiṉṟēṉ; empirāṉ tēvi paṭṭa
aruñ ciṟai mīṭṭa vaṇṇam aḻakitu peritum ammā.