கம்பராமாயணம் 8937 · யுத்த 25.50

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கல்விக்கும் நிமிர்ந்த கீர்த்திக் காகுத்தன் தூதன் ஆகிச்
சொல்விக்க வந்து போனேன், ஆய இத்துயர் செய்தாரை
வெல்விக்க வந்தேன்; உன்னை மீட்பிக்க அன்று; வெய்தின்
கொல்விக்க வந்தேன் என்று ஓர் கொடும்பழி கூட்டிக் கொண்டேன்.

பொருள் · Meaning in Tamil

கல்விக்கும் நிமிர்ந்த கீர்த்தி - கல்வி அறிவிற்கும் எட்டாது உயர்ந்த பெரும்புகழினை உடைய காகுத்தன் தூதன் ஆக - இராமபிரானுக்குத் தூதுவனாக; சொல்விக்க வந்து போனேன் - அப்பெருமான் சொல்லியனுப்பியவற்றை (உன்னை உய்விக்கும் சொற்களை) தெரிவிக்க முன் வந்து போனேன்; ஆய இத்துயர் செய்தாரை வெல்விக்க வந்து - (ஆனால் இப்போதேற கூட்டமாக இந்தத் துயர் செய்த அரக்கர்களை வெல்விக்கவந்தேன்; உன்னை மீட்பிக்க அன்று - உன்னை மீட்பிக்க அன்று; வெய்தின் உன்னைக் கொல்விக்க வந்தேன் - கொடுமையாக உன்னைக் கொல்லுமாறு செய்யவே வந்தேன் என்று; கொடும்பழி கூட்டிக் கொண்டேன் - ஒரு கொடும் பழியை நான் தேடிக்கொண்டேன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'As the messenger of Kākuttaṉ, whose fame towers beyond all learning,
  2. I came before to deliver his words, and went; now I came
  3. to make those who caused this grief win, not to rescue you;
  4. I came only to get you cruelly killed; I have heaped up a cruel infamy.'

What the poem says

Aṉumaṉ recalls that he first came to Ilaṅkai as the envoy of Irāmaṉ (Kākuttaṉ, 'of the line of Kakutstha') to bring Cītai his message of hope. Now, he says, it seems he came back only to let the rākṣasas triumph and to have her killed. He feels he has earned himself a terrible disgrace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kalvikkum nimirnta kīrttik kākuttaṉ tūtaṉ āka
colvikka vantu pōṉēṉ, āya it tuyar ceytārai
velvikka vantu niṉṉai mīṭpikka aṉṟu; veytiṉ
kolvikka vantēṉ uṉṉai koṭum paḻi kūṭṭik koṇṭēṉ.