கம்பராமாயணம் 8939 · யுத்த 25.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அருங்கடல் கடந்து - கடத்தற்கு அரிய கடலைக் கடந்து வந்து; இவ் ஊரை அள் எரிமடுத்து - இவ்ஊரைச் செறிந்த நெருப்பினால் கொளுத்தி; வெள்ளக் கருங்கடல் கட்டி - நீர் நிறைந்த கரிய கடலுக்கு அணை கட்டுவதில் உதவி செய்து; மேருக்கடந்து ஒருமருந்து காட்டி - மேருமலையைத் தாண்டிச் சென்று ஒப்பற்ற மருந்தினைக் கொணர்ந்து காட்டி; ‘குரங்கு இனி உன்னோடு ஒப்பது இல்’ எனக் களிப்புக் கொண்டேன் - ‘குரங்குகளிலே இனி உன்னோடு ஒப்பக் கூறக் கூடிய குரங்கு ஒன்றுமில்லை’ எனப் பிறர் புகழக் கேட்டுக் களிப்புக்கொண்டேன்; என் அடிமைப் பெற்றி பெருங்கடல் கோட்டம் தேய்த்தது ஆயது - இத்தகைய என் அடிமைத் தன்மை பெரிய கடலில் தேய்த்து விட்ட கோட்டம் போலப் பயனற்றுப் போய் விட்டதே!
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Crossing the hard-to-cross sea, setting this city ablaze with dense fire,
- bridging the flooding dark ocean, leaping past Mēru to bring a unique medicine,
- I exulted when they said, "No monkey is equal to you now";
- but my service has become like kōṭṭam rubbed away in the great sea!'
What the poem says
Aṉumaṉ lists his great deeds: leaping the ocean, burning Ilaṅkai, helping build the causeway, crossing beyond Mount Mēru to bring the healing herb. He had rejoiced when others praised him as unequalled among monkeys. Now all his service has come to nothing, like the fragrant kōṭṭam (costus) paste rubbed into sea water, where its scent is simply lost.