கம்பராமாயணம் 8941 · யுத்த 25.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்ன நின்று இரங்கி, கள்வன் ‘அயோத்திமேல் எழுவேன்’ என்று - என்று சொல்லி நின்று அனுமன் இரங்கி, கள்வனாகிய இந்திரசித்து, ‘அயோத்திமேல் எழுகின்றேன்’ என்று; சொன்னதும் உண்டு போன சுவடு உண்டு - சொன்னவாறே அத்திசை நோக்கிப் போன அடையாளமும் உண்டு; தொடர்ந்து செல்லின் மன்னன் இங்கு உற்றதன்மை உணர்கிலன் - அவனைத் தொடர்ந்து நான் போனால் இராமன் இங்கு நடந்ததை உணரவழியில்லை; வருவது ஓரேன் பின் இனி முடிப்பது யாது? - இனி விளைவதை அறியமுடியாதவனாக இருக்கின்றயான், தொடர்ந்து செய்து முடிக்க வேண்டுவது எதனை? என்று இரங்கினான் உணர்வு பெற்றான் - என்றுமனமிரங்கித் துன்புற்றவனாய்ப் பின் உணர்வினைப் பெற்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So he stood and grieved: 'The thief said, "I will march on Ayōttī,"
- and there is the track of his going; if I follow him,
- the king will not learn what has happened here; I cannot foresee what will come;
- what then must I do now?' So he lamented, and came to his senses.
What the poem says
Aṉumaṉ weighs what to do. Intiracittaṉ, 'the thief', announced he would attack Ayōttī and seems to have gone that way. If Aṉumaṉ chases him, Irāmaṉ will not learn what has happened. Unsure of the future, he struggles with the choice until he steadies himself.