கம்பராமாயணம் 8942 · யுத்த 25.55

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'உற்றதை உணர்த்தி, பின்னை உலகுடை ஒருவனோடும்,
இற்று உறின், இற்று மாள்வென்; அன்று எனின், எண்ணம் எண்ணி,
சொற்றது செய்வென்; வேறு ஓர் பிறிது இலேன்; துணிவு இது என்னா,
பொன்தடந் தோளான், வீரன் பொன் அடி மருங்கில், போனான்.

பொருள் · Meaning in Tamil

உற்றதை உணர்த்தி பின்னை இற்று உறின் - நடந்ததை இராமனுக்குக் கூறிப் பிறகு (அவன்) உயிர் நீங்கப் பெறுவானாயின்; உலகுடை ஒருவனோடும் இற்று மாள்வென் - உலகுடைய அப்பிரானோடு, யானும் அழிந்தொழிவேன்; அன்று எனின் எண்ணம் எண்ணி சொற்றது செய்வென் - அங்ஙனமில்லையாயின் அவன் கருத்தை எண்ணி அறிந்து அவன் சொன்னதைச் செய்வேன்; வேறு பிறிது ஓர் இலன் துணிவிற்று என்னா - வேறு பிறிது ஒரு செயலும் யான் உடையனல்லேன்; இதுவே துணிவு என்று; பொன் தடந்தோளான், வீரன் பொன் அடி மருங்கில் போனான் - பொன்னிறமான பெரிய தோளை உடைய அனுமன் வீரனாகிய இராமனது அழகிய திருவடிகளின் மருங்கில் சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I will tell him what has happened; then, along with the one lord of the world,
  2. if he perishes, I too will perish and die; if not, I will learn his mind
  3. and do what he commands; I have no other course; this is decided,' he said,
  4. and he of the broad golden shoulders went to the hero's golden feet.

What the poem says

Aṉumaṉ resolves to tell Irāmaṉ everything. If Irāmaṉ dies of grief, Aṉumaṉ will die with him; if not, he will find out his master's will and obey it. With his mind made up, he hurries to Irāmaṉ's side.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'uṟṟatai uṇartti, piṉṉai ulakuṭai oruvaṉōṭum,
iṟṟu uṟiṉ, iṟṟu māḷveṉ; aṉṟu eṉiṉ, eṇṇam eṇṇi,
coṟṟatu ceyveṉ; vēṟu ōr piṟitu ilaṉ; tuṇiviṟṟu eṉṉā,
poṉ taṭan tōḷāṉ, vīraṉ poṉ aṭi maruṅkil, pōṉāṉ.