கம்பராமாயணம் 8943 · யுத்த 25.56

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சிங்க ஏறு அனைய வீரன் செறிகழல் பாதம் சேர்ந்தான்,
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கண் உற்றான்,
பொங்கிய பொருமல் வீங்கி, உயிர்ப்பொடு புறத்தைப் போர்ப்ப,
வெங்கண் நீர் அருவி சோர, மால்வரை என்ன வீழ்ந்தான்.

பொருள் · Meaning in Tamil

சிங்க ஏறு அனைய வீரன் செறிகழல் பாதம் சேர்ந்தான் - ஆண் சிங்கத்தைப் போன்ற வீரனாகிய இராமனது வீரக்கழல் அணிந்த பாதத்தை நெருங்கிய அனுமன்; அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான் - உடம்பும், உளமும் கண்ணும் உயிரும் பதைக்கத் துயரமுற்றவனாய்; பொங்கிய பொருமல் வீங்கி, உயிர்ப்பொடு புரத்தைப் போர்ப்ப - மனத்துள் பொங்கி எழுந்த அழுகைப் பொருமல் பெருகிப் பெருமூச்சோடு உடம்பின் புறத்தை மூடிக்கொள்ள; வெங்கண் நீர் அருவி சோர, மால்வரை என்ன வீழ்ந்தான் - வெம்மையான கண்ணீர் அருவிபோல வீழ பெரிய மலை வீழ்வது போல வீழ்ந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He reached the anklet-bound feet of the hero who was like a lion,
  2. his body, mind, eyes and life all in torment;
  3. as swelling sobs welled up and with his sighs covered his frame,
  4. hot tears streaming like a waterfall, he fell like a great mountain.

What the poem says

Aṉumaṉ reaches Irāmaṉ, the lion among heroes. Every part of him is in agony; sobs and heavy sighs shake his body, scalding tears pour down like a waterfall, and he collapses at Irāmaṉ's feet like a falling mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ciṅka ēṟu aṉaiya vīraṉ ceṟi kaḻal pātam cērntāṉ,
aṅkamum maṉamum kaṇṇum āviyum alakkaṇuṟṟāṉ,
poṅkiya porumal vīṅki, uyirppoṭu purattaip pōrppa,
veṅ kaṇ nīr aruvi cōra, māl varai eṉṉa vīḻntāṉ.