கம்பராமாயணம் 8944 · யுத்த 25.57

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வீழ்ந்தவன் தன்னை, வீரன், 'விளைந்தது விளம்பு 'கென்னா,
தாழ்ந்து, இரு தடக்கை பற்றி எடுக்கவும், தரிக்கிலாதான்,
'ஆழ்ந்து அழு துன்பத் தாளை, அரக்கன், இன்று, அயில்கொள் வாளால்
போழ்ந்தனன் 'என்னக் கூறி, புரண்டனன், பொருமுகின்றான்.

பொருள் · Meaning in Tamil

வீழ்ந்தவன் தன்னை வீரன் ‘விளைந்தது விளம்புக!’ என்னா - வீழ்ந்தவனாகிய அனுமனை, ‘நடந்ததைக் கூறுக' என்றவாறு; தாழ்ந்து இரு தடக்கை பற்றி எடுக்கவும், தரிக்கிலாதான் - குனிந்து அவனுடைய பெரியகைகளைப் பற்றி எடுக்கவும், எடுக்கத்தரிக்கலாதவனாய்; ‘ஆழ்ந்து எழு துன்பத்தாளை அரக்கன் இன்று அயில் கொள்வாளால் - ஆழப் பதிந்து எழுகின்ற துன்பத்தையுடைய சீதாபிராட்டியை அரக்கனாகிய இந்திரசித்து இன்று கூர்மையான வாளினால்; போழ்ந்தனன்' என்னக் கூறிப் புரண்டனன், பொருமுகின்றான் - பிளந்து விட்டான்' என்று கூறி (மண்ணில்) புரண்டு விம்முவானாயினன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The hero said to the fallen one, 'Tell me what has happened,'
  2. and bent and took him by his two great hands to raise him; unable to bear it,
  3. he said, 'Her whose grief rose from the depths, the rākṣasa today with his sharp sword
  4. has cut in two,' and he rolled on the ground, sobbing.

What the poem says

Irāmaṉ stoops, takes Aṉumaṉ's hands to lift him, and asks what has happened. Aṉumaṉ cannot even bear to be raised. He blurts out that the rākṣasa has today split Cītai, already sunk in deep sorrow, with his sharp sword, and then he rolls on the ground, sobbing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīḻntavaṉtaṉṉai, vīraṉ, 'viḷaintatu viḷampuka' eṉṉā,
tāḻntu, iru taṭak kai paṟṟi eṭukkavum, tarikkilātāṉ,
'āḻntu eḻu tuṉpattāḷai, arakkaṉ, iṉṟu, ayil koḷ vāḷāl
pōḻntaṉaṉ 'eṉṉak kūṟi, puraṇṭaṉaṉ, porumukiṉṟāṉ.