கம்பராமாயணம் 8950 · யுத்த 25.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சீதநீர் முகத்தின் அப்பி சேவகன் மேனி தீண்டி - (வீடணன்) குளிர்ந்த நீரை இராமனின் முகத்தில் தெளித்து அப்பிரானின் திருமேனியைத் தன் கையால் தீண்டி; போதம், வந்து எய்தற்பால யாவையும் புரிந்து - உணர்வு வருதற்குரிய எல்லாச் செயல்களையும் செய்து; பொன்பூம் பாதமும் கையும் மெய்யும் பற்றினன் - வருடலோடும் - அழகிய மலர் போன்ற அவன் திருவடிகளையும் கைகளையும் உடம்பையும் தன் கையால் பற்றித் தடவிக்கொடுத்த அளவில்; வேதமும் காணா வள்ளல் விழித்தனன் கண்ணை மெல்ல - வேதங்களாலும் காண முடியாத வள்ளல் தன்மையுடையவனாகிய இராமன் கண்களை மெல்ல விழித்தான்.
போதம் - உணர்வு. வீடணனால் தீண்டற்கரிய மேனி என்பதனைச் சேவகன் மேனிதீண்டி என்பதனாற் குறிப்பித்தார் வேதமும் காண முடியாதவனாகிய பிரான் அரக்கர் குலத்தில் தோன்றியவனாயினும் தன் அன்பனாகையால் அவனுக்கு எளிவந்து, பொன்பூம்பாதமும் கையும், மெய்யும் பற்றி வருடக் கிடந்து அத்தொண்டினை ஏற்கவே மயங்கினன் போல விழித்தெழுந்த கருணை நோக்கி, ‘வள்ளல் விழித்தனன்’ என்றார். இவ்வுபசாரங்களை இலக்குவன் செய்தனன் எனக் கூறுவாரும் உளர். மூல நூலில், இவ்வுபசாரங்களைத் துயருற்று அங்கு வந்த தேவர்கள் செய்தனர் எனக் கூறப் பெற்றுள்ளது
ஆங்கிலம் · English translationAI
Translation
- Smearing cool water on his face, touching the warrior's body,
- doing all that might bring back his senses,
- as he held and stroked the golden flower-like feet, the hands and the body,
- the generous one whom even the Vedas cannot see slowly opened his eyes.
What the poem says
Vīṭaṇaṉ revives Irāmaṉ: he sprinkles cool water on his face and gently massages his feet, hands and body. Irāmaṉ, whom even the Vedas cannot fully grasp, slowly opens his eyes. The phrase 'touching the warrior's body' stresses the privilege of a rākṣasa devotee being allowed such intimacy, and the poet calls Irāmaṉ 'the generous one' because he lay still to accept this service as if still unconscious. Some say it was Ilakkuvaṉ who revived him; in Vālmīki's original it is the grieving gods.