கம்பராமாயணம் 8952 · யுத்த 25.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முடியும் நாள் தானே வந்து முற்றினால் - ஒருவருக்கு முடிவுநாள் (ஊழ்வினையால்) தானே வந்து சேர்ந்தால், துன்ப முந்நீர் படியுமாம் சிறியோர் தன்மை - துன்பமாகிய கடலில் அழுந்தி விடும் தன்மை சிறியோர் தன்மையாகும்; நினக்கு இது பழியிற்று ஆமால் - (பெருந்தன்மையுடைய) நினக்கு (துன்பக்கடலில் அழுந்துவது) இத்தன்மை பழியினைத் தருவதாகும்; குடியும் மாசு உண்டது என்னின் - (அறத்துவழிப்படும்) நமது குடியும் மாசுபட்ட தென்றால்; அறத்தொடும் உலகைக் கொன்று கடியுமாறு அன்றி - (பயன்படாதுதருமத்தையும் (தகாத செயலைப் பார்த்து நின்ற) உலகத்தையும் அழித்து ஒழிப்பதல்லாமல்; கருத்து இலார்போல் சோர்ந்து கழிதியோ - கருத்தில்லாதவர்போல மனம் சோர்ந்து கிடப்பாயோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'When a fated end arrives of itself, to sink
- into an ocean of grief is the way of small men; for you this would be a disgrace;
- if our very house has been stained, instead of destroying the world along with dharma
- and casting them out, will you droop and waste away like those without understanding?'
What the poem says
Ilakkuvaṉ argues that drowning in grief when misfortune strikes is the mark of lesser people and unworthy of Irāmaṉ. If their family's honour has been stained, the right response is fury: to destroy the world that stood by, and even the dharma that failed to protect Cītai, rather than lie limp like someone without sense.