கம்பராமாயணம் 8953 · யுத்த 25.66

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தையலை, துணை இலாளை, தவத்தியை - மெல்லியலாகிய பெண்ணை, துணையில்லாதவளை, தவ நிலையில் இருப்பவளை; தருமக் கற்பின் தெய்வதம் தன்னை மற்று உன் தேவியை - அறநெறியாகிய கற்பின் தெய்வமாக இருப்பவளை, அறத்தைக்காக்கும் நின்தேவியை; திருவைத் தீண்டி வெய்யவன் கொன்றான் என்றால் - திருமகள் போல்பவளை கையால் தீண்டி கொடியவனாகிய இந்திர சித்து கொலை செய்தான் என்றால்; வேதனை உழப்பது இன்னும் உய்யவோ? கருணையாலோ? - (அறத்தோடு இவ்வரக்கர் குலத்தையும் வேரோடு அழிக்காமல்) வேதனைப்படுவது, இன்னும் உயிர் உய்ந்து வாழ வேண்டும் என்பதாலோ அன்றிக் கருணையாலோ? தருமத்தோடு உறவும் உண்டோ? - இனித் தருமத்தோடு நமக்கு உறவென்பது உண்டோ? (இல்லை என்றவாறு).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The gentle lady, the one without a protector, the ascetic,
  2. the goddess of righteous chastity, your own queen, Tiru herself,
  3. if the cruel one has laid hands on her and killed her, is it to go on living
  4. that you suffer this agony? Or out of pity? Have we any bond left with dharma?'

What the poem says

Ilakkuvaṉ lists Cītai's virtues: a delicate woman, alone and unprotected, living like an ascetic, a goddess of chastity, Irāmaṉ's queen, Lakṣmī herself. If a cruel rākṣasa has touched and killed such a woman, why does Irāmaṉ merely suffer? Is it to save his own life, or from mercy toward the enemy? Dharma has failed them, so they owe it nothing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'taiyalai, tuṇai ilāḷai tavattiyai, tarumak kaṟpiṉ
teyvatamtaṉṉai, maṟṟu uṉ tēviyai, tiruvai, tīṇṭi,
veyyavaṉ koṉṟāṉ eṉṟāl, vētaṉai uḻappatu iṉṉum
uyyavō? karuṇaiyālō? tarumattōṭu uṟavum uṇṭō?