கம்பராமாயணம் 8956 · யுத்த 25.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புக்கு, இவ்வூர் இமைப்பின் முன்னம் பொடிபடுத்து - புகுந்து இந்த இலங்கையை இமைப்பொழுதில் பொடிபடும் படி அழித்துவிட்டு; அரக்கன் போன திக்கு எலாம் சுட்டு - அரக்கன் போன திசை எல்லாவற்றையும் சுட்டு; வானோர் உலகு எலாம் தீர்த்து தீரத்தக்க நாம் - வானவர் உலகம் முழுவதையும் அழித்து அழியத் தக்க நாம்; கண்ணீர் ஆற்றி, தலை சுமந்து இருகை நாற்றி - (அவற்றைச் செய்யாது) கண்ணீர் பெருக்கக்கொண்டு தலையையும் சுமந்து கொண்டு, இருகைகளையும் தொங்கவிட்டுக் கொண்டு; துக்கமே உழப்பம் என்றால் சிறுமையாய்த் தோன்றும் அன்றே - துக்கப்பட்டுக் கொண்டே இருப்போம் ஆயின் இது பிறர் கண்ணுக்குச் சிறுமையாய்ப் படுமன்றோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'We who ought to storm in, grind this city to dust before an eyelid blinks,
- burn every quarter the rākṣasa went to, wipe out all the worlds of the gods
- and then perish ourselves, if we only shed tears, carry our heads bowed,
- let our two arms hang, and wallow in sorrow, will it not look petty?'
What the poem says
Ilakkuvaṉ says that what they ought to do is enter Ilaṅkai and reduce it to dust in an instant, burn every direction Intiracittaṉ fled to, destroy the heavens, and die in the attempt if need be. Instead they sit weeping with bowed heads and drooping arms, which others will see as weakness.