கம்பராமாயணம் 8958 · யுத்த 25.71

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆவி போக்கினால் - இப்பொழுது துன்பத்தினால் உயிர் விடுவோமாயின்; ‘மன்றல் அம் கோதையாளைத் தம் எதிர் கொணர்ந்து - மணம்மிக்க அழகிய கூந்தலை உடைய சீதையைத் தமக்கு எதிரிலேயே கொண்டுவந்து; வாளின் கொன்றவர் தம்மைக் கொல்லும் கோள் இலர் - வாளினால் கொன்ற அரக்கரைக் கொல்லும் வலிமையில்லாதவர்கள்; நாணம் கூரப் பொன்றினர்’ என்பர் - நாணம் மிகுதலால் இறந்துபட்டார்கள்' என்று உலகவர் பேசுவர்; பொதுமை பார்க்கின் இது கருமம் அன்று - நடுநிலையில் நின்று பார்த்தால் இங்ஙனம் துன்புறுவது நமக்குரிய செயல் அன்று; அறிவு இலாதவர்போல் நீ அயர்கின்றது என்? - (எல்லாம் உணர்ந்தநீ) அறியாதவர் போல் வருந்துவது எதற்காக?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. '"They had no power to kill those who brought the lady with fragrant garlanded hair
  2. before their eyes and slew her with the sword; overcome with shame,
  3. they perished," people will say, if we give up our lives; seen impartially,
  4. this is not the thing to do; why do you faint like one without understanding?'

What the poem says

Ilakkuvaṉ warns that if they die of grief now, the world will say they lacked the strength to kill the rākṣasa who slew Cītai in front of them, and so died of shame. Judged fairly, this is not the course for them. He asks why Irāmaṉ, who understands everything, is behaving as if he knew nothing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṉṟal am kōtaiyāḷait tam etir koṇarntu, vāḷiṉ
koṉṟavartammaik kollum kōḷ ilar, nāṇam kūrap
poṉṟiṉar 'eṉpar, āvi pōkkiṉāl; potumai pārkkiṉ,
aṉṟu itu karumam; eṉ, nī ayarkiṉṟatu, aṟivu ilārpōl?'