கம்பராமாயணம் 8959 · யுத்த 25.72

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அனையன இளவல் கூற அருக்கன் சேய் அயர்கின்றான் - அத்தகைய சொற்களை இலக்குவன் சொல்லக் கேட்ட சுக்கிரீவன், துன்பத்தால் சோர்ந்து கிடக்கின்றவன்; ஓர் கனவு கண்டனனே என்னக்கதுமென எழுந்து - ஒரு கனவு கண்டவனைப் போல விரைந்து எழுந்து; ‘காணும் வினை இனி உண்டே? வல்லை விளக்கின் வீழ் விட்டில் என்ன - இனி ஆராய்ந்து பார்க்கும்செயலும் உண்டோ? விரைந்து விளக்கில் வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சி என்று கூறும் படியான செயல்களை உடையவனாய்; மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்மின் என்றான் - இப்பொழுது தன் அரண்மனையின் கண்ணே உறையும் அரக்கனாகிய இராவணன் மார்பில் குதிப்போம் வாருங்கள்’ என்று கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the younger brother had spoken thus, the Sun's son, who lay fainting,
  2. sprang up suddenly as if he had seen a dream, and said, 'Is there anything
  3. left to ponder now? Swiftly, like moths that fall into a lamp,
  4. let us leap upon the breast of the rākṣasa who dwells in his palace; come!'

What the poem says

Ilakkuvaṉ's words rouse Cukkirīvaṉ, the son of the Sun, who had been lying prostrate with grief. He jumps up as if waking from a dream and declares there is nothing left to deliberate. Like moths that hurl themselves into a flame, they should rush at once on Irāvaṇaṉ in his palace, even at the cost of their lives.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiyaṉa iḷaval kūṟa, arukkaṉ cēy, ayarkiṉṟāṉ, ōr
kaṉavu kaṇṭaṉaṉē eṉṉak katumeṉa eḻuntu, kāṇum
viṉai iṉi uṇṭē? vallai, viḷakkiṉ vīḻ viṭṭil eṉṉa,
maṉai uṟai arakkaṉ mārpil kutittum, nām; vammiṉ 'eṉṟāṉ.