கம்பராமாயணம் 8960 · யுத்த 25.73

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இலங்கையை இடந்து, வெங்கண் இராக்கதர் என்கின்றாரைப்
பொலங்குழை மகளிரோடும், பால்நுகர் புதல்வரோடும்,
குலங்கேளாடு அடங்கக் கொன்று, கொடுந்தொழில் புரிதும்; நம்மேல்
விலங்குவார் என்னின், தேவர் விண்ணையும் மண்ணில் வீழ்த்தும்.

பொருள் · Meaning in Tamil

இலங்கையை இடந்து வெங்கண் இராக்கதர் என்கின்றாரைப் - இலங்கை நகரத்தையே பெயர்த்து விட்டு கொடிய கண்களை உடைய அரக்கர் என்பவர்களை; பொலங்குழை மகளிரோடும் பால் நுகர் புதல்வரோடும் - பொன்னாலியன்ற குழையினை அணிந்த மனைவியரோடும் பாலுண்கின்ற புதல்வர்களோடும்; குலங்களோடு அடங்கக்கொன்று, கொடுந்தொழில் குறித்து - இனத்தோடு அழியுமாறு கொன்று; அக்கொலைத் தொழிலைக்குறித்து; நம்மேல் விலங்குவார் தேவர் என்னின் - நம்மேல் வெகுண்டு வந்து தேவர்கள் தடுப்பாராயின்; விண்ணையும் மண்ணில் வீழ்த்தும் - அவர்களது விண்ணுலகத்தையும் இம்மண்ணுலகத்தில் வீழ்த்துவோம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Let us uproot Ilaṅkai, and those called rākṣasas, cruel-eyed,
  2. together with their women in golden earrings and their sons who still drink milk,
  3. kill them all with their whole clans; and if, because of that cruel deed,
  4. the gods should block our way, we will bring heaven itself down to earth.'

What the poem says

Cukkirīvaṉ continues. He proposes tearing Ilaṅkai from its foundations and slaughtering the rākṣasas with their wives and even their infant sons. If the gods try to stop such a massacre, the monkeys will pull heaven down to the ground as well.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ilaṅkaiyai iṭantu, veṅ kaṇ irākkatar eṉkiṉṟāraip
polaṅ kuḻai makaḷirōṭum, pāl nukar putalvarōṭum,
kulaṅkaḷōṭu aṭaṅkak koṉṟu, koṭun toḻil kuṟittu; nammēl
vilaṅkuvār eṉṉiṉ, tēvar viṇṇaiyum maṇṇil vīḻttum.