கம்பராமாயணம் 8961 · யுத்த 25.74
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அறம் கெடச் செய்தும் என்றே அமைந்தனம் ஆகின் - அறங்கெடுமாறு (செயல்) செய்வோம் என்றே துணிந்து விட்டோமாயின்; ஐய! புறம் கிடந்து உழைப்பது என்னே - ஐயனே! புறத்தே கிடந்து வருந்துவது எதற்காக? இறைபொழுது புவனம் மூன்றும் கறங்கு எனத் திரிந்து - சிறிது பொழுதினுக்குள் உலகங்கள் மூன்றிலும் காற்றாடி போலத்திரிந்து; தேவர் குலங்களைக் கட்டும் என்னா - தேவர் குலங்களையும் களைந்தெறிவோம்' என்று கூறியவாறு; மறம் கிளர் வயிரத்தோளான் இலங்கை மேல் வாவலுற்றான் - வீரம் விளங்குகின்ற வயிரம் போன்ற தோள்களை உடையவனான சுக்கிரீவன் இலங்கை மேல் பாயத் தொடங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If we have resolved that we will act even if dharma is ruined, sir,
- why lie here outside and suffer? In a moment, through all three worlds
- let us whirl like a spinning top and root out the clans of the gods,'
- and he of the diamond shoulders, blazing with valour, began to leap at Ilaṅkai.
What the poem says
Cukkirīvaṉ declares that since they have decided to act even at the cost of dharma, there is no point lying outside the city in misery. They should sweep through the three worlds like a whirling top and root out even the gods. With that, the monkey king, his shoulders hard as diamond, starts to leap toward Ilaṅkai.