கம்பராமாயணம் 8962 · யுத்த 25.75
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மன்னனின் முன்னம் - சுக்கிரீவ மகாராஜாவுக்கு முன்னால்; மற்றைய வீரர் எல்லாம் - ஏனைய வானர வீரர்கள் அனைவரும், தாவி - (இலங்கைமேல் புறப்பட்டு; ‘அரக்கர் தம்மை இல்லொடும் எடுத்து எற்றுதும்' என்று - ‘அரக்கர்களை அவர்கள் வாழும் வீட்டோடு தூக்கி மோதிவிடுவோம்' என்று சொல்லி; ஏகல் உற்றனர் - செல்லத் தொடங்கினார்கள்; உறுதலோடும் - அப்படிச் செல்லத் தொடங்கியவுடனே; அனுமன் -; ‘உணர்த்துவது உளது' என்று உன்னா - ‘இவர்களுக்குச் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது’ என்று (மனத்தில்) கருதி; வஞ்சன் - வஞ்சனையுடையவனான இந்திரசித்து; அயோத்தி மேல் போன சூழ்ச்சி - அயோத்தியை நோக்கிப் போர் செய்யச் (செல்வதாகச் சென்ற தீய ஆலோசனையை; சொற்றனன் - எடுத்துச் சொன்னான்.
இலங்கையை அழிப்பதினும் மிக முக்கியம் அயோத்தியில் உள்ளாரைப் பாதுகாப்பது ஆதலின் இதுகாறும் சொல்லாதுவிட்ட அந்த இந்திரசித்துவின் செயலை விரைந்து சொன்னான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the other warriors, leaping ahead of the king,
- crying 'We will lift the rākṣasas with their houses and dash them down,'
- set out; and as they went, thinking 'There is something I must make known,'
- Aṉumaṉ told them of the deceiver's scheme of marching on Ayōttī.
What the poem says
The other monkey warriors rush ahead of Cukkirīvaṉ, vowing to pick up the rākṣasas along with their houses and smash them. As they start off, Aṉumaṉ realises he has not yet told the most urgent part of his news: Intiracittaṉ has left, apparently for Ayōttī. Protecting the people there matters more than destroying Ilaṅkai, so he speaks up at once.