கம்பராமாயணம் 8964 · யுத்த 25.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழிநின்று அனந்தர் நீங்கி - ஆழமான பாலின் வெள்ளத்தை உடைய கடலிலிருந்து உறக்கம் நீங்கி; எழுந்தனன் என்ன துன்பக் கடலின் நின்று ஏறி - எழுந்தவன் போலத் துன்பமாகிய கடலினின்றும் ஏறி; ஆறாக் கொழுந்து உறு கோபத் தீயும் நடுக்கமும் மனத்தைக் கூட - ஆறாததாய்க் கொழுந்துவிட்டு எரிகின்ற கோபத்தீயும் நடுக்கமும் உள்ளத்தைச் சேர; உழுந்து உருள் பொழுதும் தாழா விரைவினான் மறுக்கம் உற்றான் - உழுந்து உருள் பொழுதுங் கூடத் தாமதித்தலில்லாத விரைந்த முயற்சியை உடையவனான இராமன் கலக்கம் அடைந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if rising from sleep out of the deep flood of the ocean of milk,
- he came up out of the sea of grief; and as an unquenchable
- flaming fire of anger and a trembling seized his mind,
- he whose speed brooks no delay even for the time a black gram rolls was thrown into turmoil.
What the poem says
Irāmaṉ comes out of his grief like Viṣṇu rising from his sleep on the ocean of milk, a reminder that Irāmaṉ is Viṣṇu incarnate. In its place come a blazing, unquenchable anger and a trembling fear. Irāmaṉ, normally so quick that he never delays even for the instant it takes a grain of black gram (uḻuntu) to roll, is now in turmoil.