கம்பராமாயணம் 8967 · யுத்த 25.80
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஒருவன் தீமை தாதைக்கும் சடாயுவான தந்தைக்கும் - ஒருவனாகிய என்னுடைய தீமை, என்னுடைய தந்தைக்கும், (என்னைமகனாக ஏற்ற) சடாயுவான தந்தைக்கும்; தமியள் ஆய சீதைக்கும் கூற்றம் காட்டித் தீர்ந்திலது - தனிமைப்பட்ட சீதைக்கும், மரணத்தை விளைவித்தும் நீங்காமல்; பேதைப் பெண் பிறந்து பெற்ற தாயர்க்கும் - பேதமை வாய்ந்த பெண் பிறவியாய்ப் பிறந்து என்னைப் பெற்றதைத் தவிர வேறு குறையற்ற தாயர்க்கும்; பிழைப்பு இலாத காதல் தம்பியர்க்கும் - எந்தத் தவறும் இல்லாத அன்புடைய தம்பிமார்க்கும்; ஊர்க்கும், நாட்டிற்கும் காட்டிற்று அன்றே - அயோத்தி என்னும் எமது ஊர்க்கும், எமது கோசல நாட்டிற்கும் இறுதியைக் காட்டி விட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Having shown death to my father, to the father who was Caṭāyu,
- and to Cītai, left alone, the evil of one man has not ended;
- to the mothers, simple women whose only fault was bearing me,
- to my loving, blameless brothers, to the city and the land, it has shown it too.'
What the poem says
Irāmaṉ blames himself for a chain of deaths. His misfortune brought death to his father Tacarataṉ, to the vulture Caṭāyu who adopted him as a son, and now to the lonely Cītai. It has not stopped there: it now threatens his mothers, whose only fault was giving birth to him, his innocent brothers, the city of Ayōttī and the whole kingdom of Kōcalam.