கம்பராமாயணம் 8976 · யுத்த 25.89
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
‘ஏறுதும்' என்னா வீரர் எழுதலும் இறைஞ்சி - (அனுமன் தோள்மேல்) ஏறுவோம் என்று இராமலக்குவர் எழுகையில் (வீடணன் இராமனை) வணங்கி, ஈண்டுக் கூறுவது உளது துன்பம் கோளுற உள்ளம் குலுங்கி - இப்போது யான் சொல்ல வேண்டிய செய்தி உளது, துன்பம் என்னை முழுமையாகக் கொண்டதால் உள்ளம் நடுங்கி; தேறுவது அரிது; செய்கை மயங்கினென் திகைத்து நின்றேன் - தெளிவு பெறுவது அரிதாய்விட்டமையால், செயல் மயங்கியவனாய்த் திகைத்து நின்றேன்; ஆறினென்; அதனை ஐய! மாயம் என்று அயிர்க்கின்றேனால் - இப்போது அத்துன்பம் ஆறினென்; (தெளிவுற்றேன்) ஐயனே! (இந்திரசித்து) சீதையைக் கொன்ற செயல் மாயம் என்று ஐயுறுகின்றேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the heroes rose, saying 'We will climb on,' he bowed and said, 'There is
- something to say here; when grief seized me, my heart was so shaken
- that it was hard to think clearly; I was bewildered and stood dazed;
- now I am calm; and, sir, I suspect that it was all illusion.'
What the poem says
As Irāmaṉ and Ilakkuvaṉ get up to climb onto Aṉumaṉ, Vīṭaṇaṉ bows and stops them. He admits that grief had confused him, but now that his mind has cleared he suspects that the killing of Cītai was a magical illusion created by Intiracittaṉ.