கம்பராமாயணம் 8977 · யுத்த 25.90
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பத்தினி தன்னைத் தீண்டிப் பாதகன் படுத்தபோது - பத்தினியாகிய சீதையைப் பாதகனாகிய இந்திரசித்து தீண்டிக்கொன்றிருப்பானாயின் அச் செயல் நடந்த போதே; முத்திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே? - மூன்று வகையான உலகங்களும் வெந்து சாம்பலாய்ப் போயிருக்கு மன்றோ? (அங்ஙனம் நடவாமையின் அது மாயச்செயலே); அத்திறம் ஆனதேனும் அயோத்தி மேல் போன வார்த்தை - அந்நிகழ்ச்சி உண்மையாக நடந்திருந்ததாயினும் இந்திரசித்து அயோத்தி மேல் போனான் என்றவார்த்தை சித்திரம் இதனையெல்லாம் சிறிது போழ்தின்தெரியலாம் - அதிசயமானது இதையெல்லாம் இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Had the sinner laid hands on the chaste wife and slain her,
- would not the three worlds have burned to ash and ended?
- Even if that had happened, the story that he has gone against Ayōttī
- is a strange tale; all this we can learn in a little while.'
What the poem says
Vīṭaṇaṉ gives his reasons. If anyone had really touched and killed so chaste a woman, the three worlds would have burned to ashes on the spot; since they have not, it must have been an illusion. Even if she had been killed, the claim that Intiracittaṉ has gone to attack Ayōttī is suspicious. All this can be checked very soon.