கம்பராமாயணம் 8979 · யுத்த 25.92

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வண்டினது உருவம் கொண்டான் - வண்டினது உருவத்தைக் கொண்டவனாய்; மானவன் மனத்தின் போனான் - இராமனது மனத்தைப் போல் விரைந்து சென்று; தண்டலை இருக்கை தன்னைப் பொருக்கெனச் சார்ந்து - அசோகவனத்திலுள்ள சீதையின் இருப்பிடத்தை விரைந்து அடைந்து; ‘ஆவி உண்டு, இலை’ என்ன நின்ற - உயிர் உண்டு, இல்லை என ஐயுற்றுச் சொல்லுமாறு இருக்கின்ற; ஓவியம் ஒக்கின்றாளை - ஓவியம் போன்றவளாகிய சீதையை; தானே கண்களால் கருத்தில் கண்டனன் - (வீடணன்) தானே தன் கண்களினால் கருத்தோடு கண்டான்.

என்ப, மன் ஓ - ஓசை. பிறர் அறியாமலிருக்க வீடணன் வண்டின் உருவத்தை எடுத்தான். மானவன் - பெருமை உடையவன் - இராமன்; தண்டலை - குளிர்ந்த இடம். பொருக்கென - இடைச்சொல், விரைவு உணர்த்த வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He took the form of a bee and went as swift as the great one's mind;
  2. reaching in a flash the dwelling in the grove, he himself,
  3. they say, saw with his eyes and with his mind her who was like a painting
  4. that made one wonder, 'Is there life in it or not?'

What the poem says

To avoid being noticed, Vīṭaṇaṉ takes the form of a bee and flies to the Asoka grove as fast as Irāmaṉ's own thoughts. There he sees Cītai with his own eyes, alive but so still and wasted that she looks like a painted figure about whom one might ask whether she lives. Taṇṭalai means a cool, shaded garden, and the particles eṉpa maṉṉō fill out the metre.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṇṭiṉatu uruvam koṇṭāṉ, māṉavaṉ maṉattiṉ pōṉāṉ;
taṇṭalai irukkaitaṉṉaip porukkeṉac cārntu, tāṉē
kaṇṭaṉaṉ eṉpa maṉṉō, kaṇkaḷāl karuttāl, 'āvi
uṇṭu, ilai 'eṉṉa niṉṟa ōviyam okkiṉṟāḷai.