கம்பராமாயணம் 8980 · யுத்த 25.93

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தீர்ப்பது துன்பம், யான் என் உயிரொடு' என்று உணர்ந்த சிந்தை
பேர்ப்பன செஞ்சொலாள், அத் திரிசடை பேசப் பேர்ந்தாள்,
கார்ப்பெரு மேகம் வந்து கடை யுகம் கலந்தது அன்ன
ஆர்ப்பொலி அமிழ்தம் ஆக, ஆருயிர் ஆற்றினாளை.

பொருள் · Meaning in Tamil

யான் துன்பம் தீர்ப்பது என் உயிரொடு என்று - ‘யான் துன்பம் தீர்வது என் உயிரோடுதான்’ என்று; உணர்ந்த சிந்தை பேர்ப்பன செஞ்சொலாள் - எண்ணி (இறக்கத்துணிந்த) மனத்தை மாற்றும் ஆற்றலுடைய செம்மையான சொற்களை உடையவளான; அத்திரிசடை பேசப் பேர்ந்தாள் - அந்தத் திரிசடை பேசியதால் துன்பம் நீங்கப் பெற்றவளாய்; கார்ப்பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன - கரிய பெரிய மேகம் வந்து ஊழி இறுதியில் கலந்து ஆரவாரித்தாற் போன்ற; ஆர்ப்பொலி அமுதம் ஆக ஆர் உயிர் ஆற்றினாளை - (வானரங்களின் ஆரவார ஒலியே தனக்கு அமிழ்தம் போன்றதாகத் தன் அரிய உயிரைச் சுமந்திருந்த சீதையை.

‘கண்டனன்' என்று முன்பாட்டில் முடிந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She who had resolved in her mind, 'I will end my grief together with my life,'
  2. had been turned from it when that Tiricaṭai, whose true words can change a mind, spoke to her;
  3. and as if great dark clouds had come and gathered at the end of the age,
  4. the uproar of the monkeys was the nectar by which she kept her precious life.

What the poem says

This verse completes the previous one: Vīṭaṇaṉ sees Cītai, who had decided to end her suffering by dying. Tiricaṭai, Vīṭaṇaṉ's daughter and Cītai's kind companion in captivity, had talked her out of it. What keeps her alive is the roar of the monkey army, as loud as the storm clouds at the end of an age, which reaches her like nectar because it means rescue is near.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tīrppatu tuṉpam, yāṉ eṉ uyiroṭu' eṉṟu uṇarnta cintai
pērppaṉa ceñ colāḷ, at tiricaṭai pēcap pērntāḷ,
kārp peru mēkam vantu kaṭaiyukam kalantatu eṉṉa
ārppu oli amutam āka, ār uyir āṟṟiṉāḷai.