கம்பராமாயணம் 8981 · யுத்த 25.94
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வஞ்சனை என்பது உன்னி - (சீதையைக் கொன்றசெயல்) மாயம் என்பதை நினைத்து; வான் உயர் உவகை வைகும் நெஞ்சினன் ஆகி - மிகப் பெரிய மகிழ்ச்சி தங்கிய மனத்தினனாய்; உள்ளம் தள்ளுறல் ஒழிந்து நின்றான் - (முன்பு ஏற்பட்ட) மனத்தடுமாற்றம் நீங்கி நின்ற வீடணன்; வெஞ்சிலை மைந்தன் போனான் - கொடிய வில்லை உடைய இந்திரசித்து அயோத்திக்குப் போக்குக் காட்டிப் போனவன்; நிகும்பலை வேள்வியான் என்று - நிகும்பலை என்ற கோயிலில் வேள்வி செய்து கொண்டிருக்கின்றான் என்று; எஞ்சல் இல் அரக்கர் சேனை எழுந்து எழுந்து ஏகக் கண்டான் - குறைவில்லாத அரக்கர் சேனை எழுந்து எழுந்து அவ்விடத்திற்குப் போகக் கண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Realising that it was a deception, with a heart
- filled with joy as high as the sky, he stood, his mind no longer wavering;
- and saying, 'The son with the cruel bow has gone; he is at the Nikumpalai sacrifice,'
- he saw the rākṣasa army, undiminished, rising and moving off in throngs.
What the poem says
Vīṭaṇaṉ now knows the killing was a trick, and his heart soars with relief. He also sees the rākṣasa troops streaming toward Nikumpalai and realises that Intiracittaṉ never went to Ayōttī: he is performing his sacrifice there.