கம்பராமாயணம் 8982 · யுத்த 25.95

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வேள்விக்கு வேண்டற்பால கலப்பையும் விறகும் நெய்யும்
வாழ்விக்கும் தாழ்வில் 'என்னும் வானவர் மறுக்கம் கண்டான்,
'சூழ்வித்த வண்ணம், ஈதோ? நன்று; ' எனத் துணிவு கொண்டான்,
தாழ்வித்த முடியன், வீரன் தாமரைச் சரணம் சார்ந்தான்.

பொருள் · Meaning in Tamil

வேழ்விக்கு வேண்டற்பால கலப்பையும் விறகும் நெய்யும் - ‘வேள்விக்கு வேண்டியனவான கலவைப் பொருள்களும், விறகும், நெய்யும்; தாழ்வில் வாழ்விக்கும் என்னும் - நம்மைத் தாழ்வில் வாழ்விக்கப் போகின்றதே’ என்று; வானவர் மறுக்கம் கண்டான் - தேவர்கள் கலங்குதலையும் கண்டு; ‘சூழ்வித்த வண்ணம்’ ஈதோ நன்று; எனத் துணிவு கொண்டான் - ‘இந்திரசித்து சூழ்ச்சி செய்த வண்ணம் இதுதானோ நல்லது!' எனத் துணிவு கொண்டவனாய்; தாழ்வித்த முடியன் வீரன் தாமரைச் சரணம் தாழ்ந்தான் - வணங்கிய தலையினனாய் இராமனுடைய தாமரைமலர் போன்ற பாதங்களைச் சேர்ந்தான்.

கலப்பை - வேள்வியில் தருகின்ற அவிசுக்காகக் கலக்கும் கலவைப் பொருள்கள். மறுக்கம் - கலக்கம், மாயத்தால் சீதையைக் கொன்றதுபோல் காட்டியதும், அயோத்திமேல் போவதாகப் போக்குக் காட்டியதும், நிகும்பலை வேள்விக்காகவே என்பான் ‘சூழ்வித்த வண்ணம் ஈதோ?’ என்றனன். ஈதோ என்றது இதற்குத் தானோ என்ற பொருளிலாம். வேள்வி எதுகை நோக்கி ‘வேழ்வி' என ஆயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing the gods in turmoil, saying 'The mixed offerings, the firewood and the ghee
  2. needed for the sacrifice will make us live in abasement,'
  3. he was sure: 'So this is what the plot was for! Good!'
  4. and with bowed head he came and bowed at the hero's lotus feet.

What the poem says

Vīṭaṇaṉ sees the gods in alarm, for the offerings, firewood and ghee being carried to the sacrifice spell their own humiliation. He understands the whole scheme: the phantom killing and the pretended flight to Ayōttī were only to keep the enemy away from Nikumpalai. He returns and bows at Irāmaṉ's feet. The spelling vēḻvi for vēḷvi is used to fit the rhyme pattern.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vēḷvikku vēṇṭaṟpāla kalappaiyum viṟakum neyyum
vāḻvikkum tāḻvil 'eṉṉum vāṉavar maṟukkam kaṇṭāṉ,
'cūḻvitta vaṇṇam, ītō? naṉṟu;' eṉat tuṇivu koṇṭāṉ,
tāḻvitta muṭiyaṉ, vīraṉ tāmaraic caraṇam tāḻntāṉ.