கம்பராமாயணம் 8986 · யுத்த 26.2

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்றலும் இறைஞ்சி - என்று (இராமன் கூறிய அளவில் (வீடணன் இராமனை) வணங்கி, யாகம் முற்றுமேல் யாரும் வெல்லார் - (இந்திரசித்து செய்யத் தொடங்கிய) வேள்வி நிறைவுறுமானால் யாரும் அவனை வெல்ல வல்லவராகார்; வென்றியும் அரக்கர் மேற்றே - வெற்றியும் அரக்கர் பக்கத்தேயாகும்; விடை அருள் இளவலோடும் சென்று அவன் ஆவி உண்டு - ஆகவே விடை கொடுப்பாயாக இலக்குவனோடும் சென்று அவனது உயிரை உண்டு; வேள்வியும் சிதைப்பென் என்றான் - அவன் இயற்றும் வேள்வியினையும் அழிப்பேன் என்று கூறினான்; நாயகன், ‘நன்று அது புரிதிர்' என்னா நவில்வதானான் - தலைவனாகிய இராமன் நல்லது! அதனைச் செய்யுங்கள்! எனச் சொல்லி (மேலும் சிலவற்றைக்) கூறுவானாயினன்.

என்றான் என்னும் பயனிலைக்குரிய வீடணன் என்னும் எழுவாய் வருவித்துரைக்கப்பட்டது. அவன் என்றது இந்திர சித்தனை. ‘நன்று அது புரிதிர்' என்பது இராமனின் இசைவு மொழி. வீடணனுடன் இலக்குவன் முதலியோரையும் சேர்த்துக் கூறுவதால் ‘புரிதிர்' எனப் பலர்பாலாற் கூறினான். நாயகன் - தலைவன் - இராமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At this he bowed and said, 'If the sacrifice is completed, no one can win;
  2. victory too will go to the rākṣasas; give me leave; with your younger brother
  3. I will go, take his life, and wreck the sacrifice as well';
  4. 'Good, do so,' said the lord, and went on to speak.

What the poem says

Vīṭaṇaṉ warns that if Intiracittaṉ completes the sacrifice no one will be able to defeat him and the rākṣasas will win. He asks permission to go with Ilakkuvaṉ, kill Intiracittaṉ and break up the rite. Irāmaṉ consents, addressing the whole party in the plural, and goes on to give instructions.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟalum, iṟaiñci, 'yākam muṟṟumēl, yārum vellār;
veṉṟiyum arakkar mēṟṟē; viṭai aruḷ; iḷavalōṭum
ceṉṟu, avaṉ āvi uṇṭu, vēḷviyum citaippeṉ 'eṉṟāṉ;
'naṉṟu, atu puritir 'eṉṉā, nāyakaṉ navilvatāṉāṉ.