கம்பராமாயணம் 8987 · யுத்த 26.3

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தம்பியைத் தழுவி, 'ஐய! தாமரைத் தவிசின் மேலான்
வெம்படை தொடுக்கும் ஆயின், விலக்குவது அன்றி, வெய்தின்
அம்பு நீ துரப்பாய் அல்லை; அனையது துரந்த காலை,
உம்பரும் உலகும் எல்லாம் விளியும்; அஃது ஒழிதி 'என்றான்.

பொருள் · Meaning in Tamil

தம்பியைத் தழுவி - (இராமன்) தன் தம்பியாகிய இலக்குவனைத் தழுவிக்கொண்டு; ‘ஐய! தாமரைத் தவிசின் மேலான் - ‘ஐயனே! (இந்திரசித்து) தாமரையை இருக்கையாகக் கொண்டுள்ள பிரமதேவனுடைய; வெம்படை தொடுக்கும் ஆயின் - வெம்மை பொருந்திய அம்பினை (உன்மேல்) தொடுத்து விடுவானாயின்; வீர! விலக்குமது அன்றி அம்பு நீ துரப்பாய் அல்லை - வீரனே! அப்பிரமாஸ்திரத்தை விலக்குவதற்காகவன்றி மற்று நின் அம்பினை (பிரமன் கணையை) (அவன்மேல்) செலுத்தா திருப்பாயாக; அனையது துரந்த காலை - அங்ஙனமின்றி நினது பிரமன் கணையை அவன் மீது விடுப்பாயின்; உம்பரும் உலகும் எல்லாம் விளியும்; அஃது ஒழிதி' என்றான் - (அவன் மட்டுமின்றி) வானுலகும், இவ்வுலகும் ஆகிய எல்லாம் அழிந்தொழியும். எனவே அதனை அங்ஙனம் செலுத்துதலைத் தவிர்ப்பாயாக என்று கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He embraced his brother and said, 'Sir! If he looses the fierce weapon
  2. of the one who sits on the lotus throne, then, hero,
  3. you must not shoot that arrow except to ward it off;
  4. if you were to loose it, the heavens and the world would all perish; refrain from it.'

What the poem says

Irāmaṉ embraces Ilakkuvaṉ and gives him his first instruction. If Intiracittaṉ uses the Brahmāstra, the weapon of Brahmā, who sits on the lotus, Ilakkuvaṉ may use his own Brahmāstra only to neutralise it. He must not launch it as an attack, for that would destroy heaven and earth alike.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tampiyait taḻuvi, 'aiya! tāmarait taviciṉ mēlāṉ
vem paṭai toṭukkum āyiṉ, vilakkumatu aṉṟi, vīra
ampu nī turappāy allai; aṉaiyatu turanta kālai,
umparum ulakum ellām viḷiyum; aḵtu oḻiti 'eṉṟāṉ.