கம்பராமாயணம் 8989 · யுத்த 26.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கூற்றம் ஒப்பாய் - (பகைவர்க்கு) இயமனைப் போன்றவனே! தருமமென்னும் கண் அகன் கருத்தைக் கண்டு - இவ்விடத்திற்கு இது தருமம் என்னும் விரிவான அறக்கோட்பாடுகளை (நுட்பமாகக்) கண்டு (அதன் வழி நின்று); வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து - (இந்திரசித்து தான் பயின்று) கைவந்த மாயச் செயல்களாக வகைபெற இயற்று முன்னரே (குறிப்பினால்) அறிந்து; மாள, கல்லுதி - அவையெல்லாம்) அறவே கெட்டொழியுமாறு (வேருடன்) பெயர்த்தெறிவாயாக; பல்பெரும் போரும் செய்து - பல்வகைப்பட்ட பெரிய போர்த் தொழில்களையும் செய்து; வருந்தின அற்றம் பார்த்து - தளர்ச்சியுற்ற சமயம் பார்த்து; அமரர் தங்கள் கூற்றினைக் கொல்லுதி - தேவர்களுக்குக் கூற்றுவனாக விளங்குகின்ற அவ்விந்திரசித்தனைக் கொல்வாயாக;
போரும் செய்து வருந்தலை என்பதற்குப் பதிலாக வருந்தின எனப் பாடம் கொள்ளப்படுகின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Know the magic arts he has mastered as he sets them out, and uproot them
- so they perish, keeping in view the broad vision called dharma;
- fight many great battles, and when he is worn out, watch for the moment
- and kill him who is death to the immortals, you who are like Death!'
What the poem says
Irāmaṉ's final advice: watch for Intiracittaṉ's illusions as he prepares them and destroy them at the root, always guided by dharma. Wear him down through long fighting, and when he tires, seize the moment and kill him, the one who has been Death to the gods, for Ilakkuvaṉ is Death to his enemies. The commentary notes a variant reading in the third line.