கம்பராமாயணம் 8990 · யுத்த 26.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சாப நூல் நெறி மறப்பிலாதாய் - வில்வேத நெறிமுறையினை மறவாதவனே! பதைத்து அவன் வெம்மை ஆடி - அவ் இந்திரசித்து பதைப்புற்று வெகுண்டு; பல்பெரும் பகழி மாரி விதைத்தவன் - பலவேறுவகைப்பட்ட பெரிய அம்புகளை மழைபோற் சொரிவானாயின்; விதையா நின்று விலக்குதி - (நீயும் அங்ஙனமே) சொரியா நின்று விலக்குவாயாக; மெலிவு மிக்கால் உதைத்த வன் சிலையின் வாளி - (அவன்) மெலிவு மிகுந்து வருந்திய நிலையில் நாண் வலிக்கப்பட்ட வலிய வில்லினின்றும் செலுத்தப்படும் அம்பினை; மருமத்தைக் கழிய ஓட்டி வதைத்தொழில் புரிதி - (அவனது) மார்பினைத் துளைத்து ஊடுருவிச் செல்லுமாறு செலுத்தி (அவனைக்) கொல்லுந்தொழிலைச் செய்வாயாக.
போரில் தான் உணர்ச்சி வசப்படாமல் நின்று எதிரியை உணர்ச்சி வசப்படச் செய்தல் வெல்லுதற்குப் பயன்படும் ஓர் உத்தி! உணர்ச்சி வசப்பட்டவன் நிதானத்தையும், கூர்ந்தறியும் ஆற்றலையும் இழந்தவனாகிப் பலவீனப்படுகின்றான். அத்தகு பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இலக்குவனுக்குக் கூறுகின்றான் இராமன். இதனைப் ‘பதைத்தவன் வெம்மையாடி’ என்பதனாலும் ‘மெலிவு மிக்கால்’ என்பதனாலும் குறித்தார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'When he grows agitated and hot with rage and sows a rain of many great arrows,
- ward them off as he goes on sowing; and when his weakness grows,
- drive an arrow from your strong, drawn bow clean through his vital chest
- and do the work of killing, you who never forget the way of the science of the bow!'
What the poem says
Irāmaṉ advises Ilakkuvaṉ, master of the science of archery, to stay calm. Let Intiracittaṉ grow agitated and pour out arrows; Ilakkuvaṉ should simply ward them off. Once the enemy is exhausted, he should shoot an arrow right through his chest. The commentary points out the tactic: keep your own composure and let the enemy lose his, since rage costs a fighter his judgement.