கம்பராமாயணம் 8991 · யுத்த 26.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விரைவு இலாதாய் - (இடருற்ற போது நிதானமிழந்து) கலங்குதல் இல்லாதவனே! தொடுப்பதன் முன்னம் வாளி தொடுத்து - (இந்திரசித்து நின்மேல்) அம்பு தொடுப்பதற்கு முன்னே (நீ அவற்றைத் தொடுத்து; துறைகள் தோறும் அவை தடுப்பன தடுத்தி - போர்த்துறைகள் தோறும் தடுத்தற்குரியனவாகிய (பகைவனுடைய) படைக்கலங்களைத் தடுத்து விலக்குவாயாக; எண்ணம் குறிப்பினால் உணர்ந்து - (பகைவனது) மனக்கருத்தினை முகக்குறிப்பு முதலியவற்றால் உணர்ந்து; தக்க கடுப்பினும் அளவு இலாத கதியினும் - தக்க விரைவுடனும் அளவு இல்லாத கதியினோடும்; கணைகள் காற்றின் விடுப்பன அவற்றை நோக்கி விடுதியால் - அம்புகள் காற்றைப் போன்று விடுப்பன வற்றை (கூர்ந்து) நோக்கி அவன்மேல்) செலுத்துவாயாக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Before he can fit them, fit your arrows, and in every mode of fighting
- block those that must be blocked; read his intent from his signs,
- and with fitting speed and boundless motion, watching the arrows
- he lets fly like the wind, shoot at them, you who are never hasty!'
What the poem says
Irāmaṉ tells Ilakkuvaṉ to anticipate his opponent: read his intentions from his face and gestures, fit arrows before he does, and block each weapon in each form of combat. Watching closely the shafts Intiracittaṉ releases like the wind, he should answer them with speed and agility, always keeping his head.