கம்பராமாயணம் 8992 · யுத்த 26.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்பன முதல் உபாயம் யாவையும் இயம்பி - என மேற்கூறியனவாகிய உபாயங்கள் யாவற்றையும் (இலக்குவனுக்கு எடுத்துக் கூறி; ஏற்ற முன்பனை நோக்கி - (தான் கூறியவற்றை விரும்பி) ஏற்றுக் கொண்ட வலிமிக்கோனாகிய இலக்குவனை (மீண்டும்) நோக்கி; ஐய! மூவகை உலகும் தான் ஆய் - ஐயனே! மூவகை உலகங்களும் தானே ஆகி, தன் பெருந்தன்மை தானும் அறிகிலா ஒருவன் - தனது பெருமையினைத் தானும் அறியாத ஒப்பற்ற தலைவனாகிய திருமால்; தாங்கும் வன்பெரும் சிலை ஈது ஆகும் - (தன் கையில்) ஏந்திய பெரிய வில் இதுவாகும்; வாங்குதி வலமும் கொள்வாய் - இதனை நின்கையில் வாங்குவாயாக (இதனால்) வெற்றியும் கொள்வாயாக.
இறைவன் தன்னினும் பிறிதுபொருள் தனக்கு ஒப்பு நோக்கவின்றி நின்ற ஒருமையன் ஆகலின், ‘தன் பெருந்தன்மை தானும் அறிகிலா ஒருவன்’ என்றார். ‘தன்பெருமை தானறியாத தன்மையன் காணேடீ’ (திருவாசகம் திருச்சாழல் - 19) என்பது ஒப்பு நோக்கத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having told him all these stratagems and more, he looked at the mighty one who accepted them
- and said, 'Sir! This is the strong great bow borne by the One
- who is himself all three worlds and who does not know even his own greatness;
- take it, and take victory too.'
What the poem says
After giving all his tactical advice, Irāmaṉ hands Ilakkuvaṉ a great bow, the one borne by Viṣṇu, the unique god who is all three worlds and whose greatness is beyond even his own knowing. The commentary compares a line of Māṇikkavācakar's Tiruvācakam describing God as one who does not know his own greatness.