கம்பராமாயணம் 8993 · யுத்த 26.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இச்சிலை இயற்கை மேல் நாள் - இந்த வில்லினுடைய இயல்பைக் குறித்து முன்னொரு நாள்; தமிழ் முனி இயம்பிற்று எல்லாம் - தமிழ் முனிவராகிய அகத்தியர் கூறியவற்றை எல்லாம்; அச்செனக் கேட்டாய் அன்றே? - உறுதியுடைய சொற்களாக (நின் உள்ளத்தில்) பதியும்படியாகக் கேட்டாயல்லவா? ஆயிரம் மௌலி அண்ணல் மெய்ச்சிலை - ஆயிரம் திருமுடிகளை உடைய திருமால் (தன் திருமேனியில் கொண்ட வில்லாகிய இது; விரிஞ்சன் தானே வேள்வியின் வேட்டுப்பெற்ற கைச்சிலை - பிரமதேவனே (தான் செய்த) வேள்வியில் விரும்பிப் பெற்ற கைவில்லாகும்; கோடி என்று கவசத்தோடும் கொடுத்தனன் - (இதனை) ஏற்றுக் கொள்வாயாக என்று (அதன் பெருமையைக்) கூறி (தனது) போர்க் கவசத்தோடும் (இலக்குவனுக்கும்) கொடுத்தான் (இராமன்)
சிலை - வில். தமிழ் முனி - அகத்தியர். சிவபெருமானிடம் தமிழ் கற்று ‘என்றுமுள அத்தென்தமிழை’ இயம்பி இசை கொண்டதால் இப்பெயர் பெற்றார். அச்சு - வலிமை, உறுதி. ‘ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும்’ (தேவா -4-4-8) என்றவாறு எண்ணிலா முடிகளை உடைய இறைவனை ‘ஆயிரமௌலி அண்ணல்’ எனக் குறித்தார் விரிஞ்சன் - பிரமன். திருமாலிடமிருந்த வில்லினை பிரமன் வேள்வி செய்து வேண்டிப்பெற்று அகத்தியரிடம் கொடுக்க, அவர் அதனை இராமனுக்கு அளிக்க அதனை இப்பொழுது இலக்குவனுக்கு, கவசத்தோடும் கொடுத்தனன் என்பது வில் வரலாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'All that the Tamil sage once told of this bow's nature,
- you heard it firmly, did you not? It is the true bow of the lord with a thousand crowns,
- the hand-bow that Viriñcaṉ himself sought and won through sacrifice;
- take it,' he said, and gave it along with his armour.
What the poem says
Irāmaṉ reminds Ilakkuvaṉ of what Akattiyaṉ, 'the Tamil sage', told them about this bow when he gave it to Irāmaṉ in the forest. It originally belonged to Viṣṇu, the lord with a thousand crowns; Brahmā (Viriñcaṉ) obtained it by performing a sacrifice and passed it to Akattiyaṉ, who gave it to Irāmaṉ. Now Irāmaṉ hands it, with his own armour, to Ilakkuvaṉ. Akattiyaṉ is called the Tamil sage because he learned Tamil from Śiva and made it known.