கம்பராமாயணம் 8994 · யுத்த 26.10

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இவ்வுலகுக்கு ஆணி ஆன ஆழியான் - இவ் உலகினுக்கு அச்சாணி போல நின்று முறைப்படுத்துகின்ற சக்கரப் படையினை உடைய (திருமாலாகிய) இராமன்; புறத்தின் ஆர்த்த தூணியும் கொடுத்து - தன் முதுகிற் கட்டியுள்ள அம்புப் புட்டிலையுங் கொடுத்து; மற்றும் உறுதிகள் பலவும் சொல்லி - மற்றும் உறுதி மொழிகள் பலவும் கூறி; தாணுவின் தோற்றத் தானைத் தழுவினன் - சிவபெருமானைப் போன்ற தோற்றத்தை உடையவனான இலக்குவனைத் தழுவிக்கொண்டான்; தழுவலோடும் சேண் உயர் விசும்பில் தேவர் - அங்ஙனம் தழுவி (ப் போர்க்கு) விடை கொடுத்தவுடனே மிக உயர்ந்த விண்ணுலகவராகிய தேவர்கள்; தீர்ந்தது எம் சிறுமை என்றார் - எம்முடைய துன்பம் தொலைந்தது என்று கூறி மகிழ்ந்தனர்.

ஆணி - தேரின் சக்கரம் கழலாதபடி அச்சின் கடையிற் செருகப்படுவது. தேரின் இயக்கம் தடைப்படாமல் நின்று காப்பது. இங்ஙனமே உலகம் இடையூறின்றி இயங்குதற்குத் தோன்றி நிற்றலின் இராமனை ‘இவ்வுலகுக்கு ஆணி ஆன ஆழியான்’ என்றார். புறம் - முதுகு. ஆர்த்த - கட்டிய. தூணி - அம்புப்புட்டில் தாணு - சிவபெருமான். அப்பெருமான் ‘செம்மேனி அம்மான்’ ஆகையினால் அந்நிறத்தினைக் கொண்ட இலக்குவனை ‘தாணுவின் தோற்றத்தான்’ என்றார்.

சிறுமை - துன்பம். இந்திரசித்தனால் அடியுண்ட அவமானத்தால் ஏற்பட்ட நாணம் எனினுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The discus-bearer, who is the linchpin of this world,
  2. gave him too the quiver bound on his back, and spoke many words of counsel,
  3. and embraced him whose form was like Tāṇu's; and as he embraced him,
  4. the gods in the high heavens said, 'Our misery is over.'

What the poem says

Irāmaṉ, the discus-bearing Viṣṇu who holds the world together as a linchpin keeps a wheel on its axle, also gives Ilakkuvaṉ his quiver and words of encouragement, then embraces him. Ilakkuvaṉ, ruddy-complexioned, is likened to Tāṇu (Śiva), 'the red-bodied lord'. At the sight the gods declare that their humiliation at Intiracittaṉ's hands is about to end.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇi, iv ulakukku āṉa āḻiyāṉ, puṟattiṉ ārtta
tūṇiyum koṭuttu, maṟṟum uṟutikaḷ palavum colli,
tāṇuviṉ tōṟṟattāṉait taḻuviṉaṉ, taḻuvalōṭum,
cēṇ uyar vicumpil tēvar, 'tīrntatu em ciṟumai, eṉṟār.