கம்பராமாயணம் 8995 · யுத்த 26.11

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மங்கலம் தேவர் கூற வானவர் மகளிர் வாழ்த்தி,
பங்கம் இல் ஆசி கூறி, பல ஆண்டு இசை பரவப் பாகத்
திங்களின் மௌலி அண்ணல் திரிபுரம் தீக்கச் சீறிப்
பொங்கினன் என்ன, தோன்றிப் பொலிந்தனன் போர்மேல் போவான்.

பொருள் · Meaning in Tamil

தேவர் மங்கலம் கூற வானவ மகளிர் வாழ்த்தி - தேவர்கள் மங்கலம் கூறி வாழ்த்தவும் தேவமகளிர் வாழ்த்தி; பங்கம் இல் ஆசி கூறிப் பலாண்டு இசை பரவ - குற்றமில்லாத ஆசிகளைக் கூறி பல்லாண்டு என்னும் இசை பாடிப் பரவவும்; போர் மேல் போவான் - போர்மேற் செல்வானாகிய இலக்குவன்; பாகத் திங்களின் மௌலி அண்ணல் - பிறை சூடிய சடையனாகிய சிவபெருமான்; திரிபுரம் தீக்கச் சீறிப் - முப்புரங்களையும் சுட்டெரிக்கச் சினந்து; பொங்கினன் என்ன, தோன்றிப் பொலிந்தனன் - பொங்கி எழுந்தான் என்னும் தோற்றமுடையவனாய் விளங்கினான்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the gods spoke words of blessing and the heavenly women praised him,
  2. uttering flawless benedictions and singing the strain 'Many Years',
  3. he who was going to battle shone forth, looking like the lord with the crescent moon in his crown
  4. when he rose in wrath to burn the Three Cities.

What the poem says

As Ilakkuvaṉ sets out, gods and celestial women bless him and sing the auspicious 'Pallāṇṭu' ('many years'). He looks like Śiva, the crescent-crowned lord, blazing with anger as he went to burn the three flying cities of the demons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṅkalam tēvar kūṟa vāṉava makaḷir vāḻtti,
paṅkam il āci kūṟi, palāṇṭu icai paravap pākat
tiṅkaḷiṉ mauli aṇṇal tiripuram tīkkac cīṟip
poṅkiṉaṉ eṉṉa, tōṉṟip polintaṉaṉ pōrmēl pōvāṉ.