கம்பராமாயணம் 8996 · யுத்த 26.12

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மாருதி முதல்வர் ஆய வானரத் தலைவரோடும்,
வீர! நீ சேறி, என்று விடை கொடுத்தருளும் வேலை,
ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்துமாக,
சீரிய சென்னி சேர்த்து, சென்றனன், தருமச் செல்வன்.

பொருள் · Meaning in Tamil

மாருதி முதல்வர் ஆய வானரர் தலைவரோடும் - அனுமனை முதலாகக் கொண்ட வானரப் படைத்தலைவர்களோடும்; வீர! நீ சேறி என்று விடை கொடுத்தருளும் வேலை - வீரனே! நீ போருக்குச் செல்வாயாக என்று (இராமன்) விடை கொடுத்தருளிய பொழுது; ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்தும் ஆக - பெரியோனாகிய இராமனின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை அகத்தும் புறத்தும் அமைய; சீரிய சென்னி சேர்த்து தருமச் செல்வன் சென்றனன் - சிறப்புடைய தன் தலையிற் பொருந்த வைத்துத் தருமத்திற்குச் செல்வம் போன்றவனாகிய இலக்குவன் (நிகும்பலைக்குச்) சென்றான்.

ஆரியன் - பெரியோன். கமல பாதம் - கமலம் போன்ற திருவடிகள். அகத்திலும் - நெஞ்சகத்திலும், புறத்திலும் - புறத்தில் புலப்படும்படியாக நாவால் வாழ்த்தியும் - என்றவாறு. திருவடிகளைச் சூடும் சீர்மையால் சீரிய சென்னி என்றார். சென்னி - தலை. தருமத்தின் செல்வம் போன்றவனாகலின் இலக்குவனைத் தருமச் செல்வன் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'With the leaders of the monkeys, Māruti foremost among them,
  2. hero, go forth,' he said; and at the moment of leave-taking,
  3. placing the noble one's lotus feet both in his heart and outwardly
  4. upon his worthy head, the treasure of dharma went forth.

What the poem says

Irāmaṉ sends Ilakkuvaṉ off with Aṉumaṉ and the other monkey commanders. Ilakkuvaṉ honours his brother's lotus feet both inwardly, holding them in his heart, and outwardly, touching them to his head. The poet calls him 'the treasure of dharma'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'māruti mutalvar āya vāṉarar talaivarōṭum,
vīra! nī cēṟi, eṉṟu viṭai koṭuttaruḷum vēlai,
āriyaṉ kamala pātam akattiṉum puṟattum āka,
cīriya ceṉṉi cērttu, ceṉṟaṉaṉ, tarumac celvaṉ.