கம்பராமாயணம் 8997 · யுத்த 26.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொலங்கொண்டல் அனைய மேனிப்புரவலன் - அழகிய மேகத்தைப் போன்ற மேனியை உடைய இராமன்; பொருமி, கண்ணீர் நிலம் கொண்டு படர நின்று - (உள்ளம்) விம்மிக் கண்ணின் நீர் ஒழுகி நிலத்திற் படர்ந்து செல்லும்படி நின்று; நெஞ்சு அழிவானை, தம்பி வலம் கொண்டு - (பிரிவால்) மனம் கலங்குகின்றவனைத் தம்பி (இலக்குவன்) வலம் வந்து வணங்கி; வயிரவல்வில் இடம் கொண்டு - (அவன் தந்த) திண்மையான வலிய வில்லினைத் தன் இடக்கையில் கொண்டு; வஞ்சன் மேலே சலம் கொண்டு - வஞ்சனைத் திறமுடையவனாகிய இந்திரசித்தன் மேல் சினங்கொண்டு; தலை கொண்டு வருவென் என்றே கடிது சென்றான் - அவனது தலையைக் கொண்டுவருவேன் என்று சொல்லி விரைந்து சென்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The king whose body is like a beautiful raincloud sobbed, his tears
- spreading over the ground as he stood heartbroken; the younger brother walked round him,
- took the strong diamond-hard bow in his left hand, and in fury
- went swiftly against the deceiver, saying, 'I will come back with his head.'
What the poem says
Irāmaṉ, dark as a rain cloud, weeps at parting, his tears spreading on the ground. Ilakkuvaṉ circles him reverently, takes the mighty bow in his left hand, and storms off against Intiracittaṉ, vowing to return with his head.