கம்பராமாயணம் 900 · பால 14.14

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நீர் திரை நிரைத்த என - நீரலைகளை ஒழுங்காக அமைத்தாற்போல; நீள் திரை நிரைத்தார் - நீண்ட (சுற்றுத்) திரைகளை வரிசையாகக் கட்டினார்கள்; ஆர்கலி நிரைத்த என - கடல்கள் ஒழுங்காக அமைக்கப்பட்டன போல; ஆவணம் நிரைத்தார் - கடைத் தெருக்களை வரிசையாக அமைத்தனர்; கார் நிரையென - மேகங்களின் வரிசை என்று சொல்லும்படி; களிறு கா இடை - யானைகளைச் சோலைகளின் இடையே; நிரைத்தார் - வரிசையாக நிறுத்தினர்; மாருதம் நிரைத்த என - காற்றை ஒழுங்காக நிறுவினாற் போல; வாசிகள் நிரைத்தார் - குதிரைகளை வரிசையாகக் கட்டினர்

தனித் தனியே தங்கியிருக்கப் பட மாடங்கள் கட்டப்படுவதும், வேண்டிய பண்டங்களை வாங்குவதற்குக் கடைவீதிகள் அமைப்பதும் சேனைகளுக்கு இன்றியமையாதன. உடன் வந்த யானை குதிரைகளையும் அவ்வவற்றிற்கு உரிய இடங்களில் வரிசையாகக் கட்டினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if lining up the waves of the sea, they lined up long screens;
  2. as if lining up oceans, they lined up market streets;
  3. like rows of rain clouds, they lined up the elephants among the groves;
  4. as if lining up the wind, they lined up the horses.

What the poem says

The camp is laid out. Long cloth screens are stretched in rows for the tents, and they ripple like waves. Market streets are set up for the soldiers to buy what they need, and they roar like the sea. The dark elephants stand among the trees like banks of rain clouds, and the swift horses are tied in lines like the wind itself held in rows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīrtirai niraitta eṉa nīḷ tirai niraittār;
ārkali niraitta eṉa āvaṇam niraittār;
kār nirai eṉak kaḷiṟu kāviṭai niraittār;
mārutam niraitta eṉa vācikaḷ niraittār.