கம்பராமாயணம் 901 · பால 14.15

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நடிக்கும் மயில் என்ன - ஆடும் மயிலைப் போல; வரும் - வருகின்ற; நவ்வி விழியாரும் - மான் போன்ற கண்களையுடைய மகளிரும்; வடிக்கும் அயில் வீரரும் - வடித்துக் கூர்மையாக்கிய வேல் வீரரும்; மயங்கினர் திரிந்தார் - மயங்கிய வண்ணம் திரிந்தனர் (தாம் போகும் இடம் இன்னதென்று தெரியாததால்); இடிக்கும் முரசக் குரலின் - (பின்பு) முழங்குகின்ற மங்கள முரசின் ஒலியாலும்; எங்கும் முரல் சங்கின் - எங்கும் ஒலியெழும் சங்கநாதங்களாலும், கொடிகளின் - கொடிகளாலும்; உணர்ந்து - (அரசனது மாளிகை இதுவென) தெரிந்து கொண்டு; அரசர் கோநகர் அடைந்தார் - அரசன் தங்கிய மாளிகையை அடைந்தார்கள்.

பட மாடங்கள் பலவும் ஒரே தன்மையில் அமைந்திருந்தமையால் வேற்றுமை தெரியாமல் மயங்கி, முரசு, சங்கு, கொடிகளால் அரசன் தங்கிய மாடம் இதுவென்று அறிந்தனர் என்பது. ஒவ்வொரு மாடமும் அரச மாளிகை போல இருந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The doe-eyed women who move like dancing peacocks
  2. and the warriors with honed spears wandered about, bewildered;
  3. by the voice of the thundering drums, by the conches sounding everywhere
  4. and by the banners, they recognised it and reached the king's royal lodge.

What the poem says

All the tents of the camp are so grand and so alike that the women and soldiers lose their way among them. Each one looks like a palace. In the end they find the king's own pavilion by the royal drums, the conches and the banners that mark it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṭikkum mayil eṉṉa varum navvi viḻiyārum,
vaṭikkum ayil vīrarum, mayaṅkiṉar tirintār;
iṭikkum muracak kuraliṉ, eṅkum mural caṅkiṉ,
koṭikkaḷiṉ, uṇarntu, aracar kōnakar aṭaintār.