கம்பராமாயணம் 902 · பால 14.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
யானை முதலானவை மிதித்துச் செல்வதால் மேலே எழுந்த; தூளியின் - புழுதியால்; விளக்கம் அறு மெய்யை - ஒளியில்லாது அழகு மழுங்கிய மனைவியரின் மேனியை; இளங்குமரர் - அம் மங்கையரின் இளமையான கணவர்; சுதைக் கண் நுரை பொருவு - பாலின் நுரையை ஒத்த; தூசு கொடு - ஆடையைக் கொண்டு; தூய்தா - (படிந்த தூசு நீங்கும்படி) தூயதாகப் (புழுதியை); உதிர்த்தனர் - போக்கினார்கள்; (அதனால்) தருண மங்கையர் - இளமையுடைய அம் மங்கையர்; ஓவியர் இன் ஓவம் - ஓவியர் அழகிய ஓவியத்தை (மாசுநீங்க); புதுக்கினர் என - புதுப்பித்தார் என்னும்படி; பொலிந்தார் - விளங்கினார்கள்.
கணவர் தம் மனைவியர் மீது படிந்திருந்த புழுதியைத் தனது ஆடையால் போக்க, அதனால் அம் மகளிர் ஓவியர்களால் புதுப்பிக்கப்பட்ட ஓவியம் போல விளங்கினர் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their bodies had lost their lustre under the dust that rose from trampling feet;
- with cloth like the foam of milk the young husbands brushed it
- clean away; and as if painters had restored
- a painting, the young women shone afresh.
What the poem says
The women's bodies are dulled by the dust kicked up on the march. Their young husbands wipe it off with cloths as white as the froth on milk. Once clean, the women shine again, like an old painting that an artist has cleaned and restored to its first freshness.