கம்பராமாயணம் 903 · பால 14.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொற்றவர் - (யானையை ஊர்தியாகக் கொண்ட) அரச குமாரர்கள்; தாள் உயர் தடகிரி இழிந்து - தாழ்வரை உயர்ந்துள்ள பெரிய மலையிலிருந்து இறங்கி; தரை சேரும் - நிலத்தை அடையும், கோள் அரியென - வலிய சிங்கத்தைப் போல; கரிகள் இழிந்தார் - யானைகளிலிருந்து கீழே இறங்கியவராய்; பாளை விரி ஒத்து உலவு - விரிந்த பாளையை ஒத்து (தம் இரு புறங்களிலும்) அசைகின்ற; சாமரை படப் போய் - சாமரைகள் வீசும்படி சென்று; வாள் எழ நிரைத்த - ஒளி எழும்படி ஒழுங்காக அமைத்த; படமாடம் அவை - கூடாரங்களில்; புக்கார் - புகுந்தார்கள்.
அரச மைந்தர்கள் யானைகளிலிருந்து இறங்கி, இருபக்கமும் வெண் சாமரைகள் வீசப் பெறக் கூடாரங்களில் புகுந்தனர் என்பது. யானைகளிலிருந்து இறங்கிய அரச குமாரர்க்கு மலையிலிருந்து இறங்கிய சிங்கம் உவமையாம். மலையடிவாரத்தில் அமைந்த குகை கூடாரத்திற்கு உவமையானது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like mighty lions coming down from a great mountain with high foothills
- to reach the ground, the princes came down from their elephants,
- and with whisks like opened palm-blossom sheaths waving beside them they went
- into the cloth pavilions pitched in rows so that they gleamed.
What the poem says
The princes riding the elephants climb down, like lions leaving a mountain for the plain. With white yak-tail whisks waved on either side of them, they walk into the shining tents. The whisks look like the opened flower-sheath of a palm, and the tents at the mountain's foot are like the caves where lions live.