கம்பராமாயணம் 904 · பால 14.18

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தூசினொடு வெண் படம் உடைக் குடில்கள் தோறும்,
வாச மலர் மங்கையர் முகங்கள், மழை வானின்
மாசு இல் மதியின் கதிர் வழங்கு நிழல் எங்கும்
வீசு திரை வெண் புனல் விழுங்கியது போலும்.

பொருள் · Meaning in Tamil

வெண் தூசினொடு - வெண்மையான ஆடைகளால் ஆகிய, படம் உடை - விருதுக் கொடிகளையுடைய; குடில்கள்தோறும் - கூடாரங்களில் எல்லாம்; நகை வாச மங்கையர் - புன்சிரிப்பும் இயற்கை மணமும் உள்ள மகளிரின்; முகங்கள் - முகங்கள்; மழை வானில் - மேகம் சஞ்சரிக்கும் வானத்திலேயுள்ள; மாசு இல் மதியின் - குற்றமில்லாத சந்திரனின்; கதிர் வழங்கும் நிழல் - ஒளி வீசும் பிரதிபிம்பங்களை; எங்கும் - எல்லா இடங்களிலும்; வீசு திரை வெண்புனல் - கடலின் அலை வீசும் வெண்மையான நீரில்; விளங்கியன - விளக்க முற்றிருப்பதை; போலும் - ஒத்திருக்கும்.

வெண்ணிறக் கூடாரங்களினுள்ளே மகளிர் முகங்கள் தோன்றுவது, கடலின் வெண்மையான நீரில் ஒளிவீசும் சந்திர பிம்பங்கள் அமைந்திருப்பது போலும் என்றார் - தற்குறிப்பேற்றவணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In every tent of white cloth hung with banners,
  2. the faces of the fragrant, smiling women shone, like the radiant reflections
  3. that the spotless moon in the sky casts everywhere
  4. in the white water of the tossing waves.

What the poem says

Inside the white tents the women's bright, smiling faces can be seen. The poet compares this to many reflections of the moon shining in the white, rolling water of the sea. The tents are the foaming waves, and each face is a moon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tūciṉoṭu veṇ paṭamuṭaik kuṭilkaḷtōṟum,
vāca nakai maṅkaiyar mukam poliva, vāṉil
mācu il matiyiṉ katir vaḻaṅkum niḻal eṅkum
vīcu tirai veṇ puṉal viḷaṅkiyaṉa pōlum.