கம்பராமாயணம் 905 · பால 14.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மண்ணுற விழுந்து - புழுதி (தன் மேல்) படியும்படி பூமியில் விழுந்து; நெடு வானுற எழுந்து - வானத்தில் பொருந்துமாறு மேலே எழுந்து; கார்நிறம் - தனது கரிய நிறத்தை; உண் நறும் பொடியை - மறைக்கின்ற மணமுள்ள புழுதியை; ஒருபாகம் வீசி - ஒரு பக்கம் கையால் வீசிவிட்டு; வெண்ணிறம் நறும்பொடி - ஒரு பகுதியில் மட்டும் வெண்ணிறமான நறும்பொடியை; புனைந்த - அணிந்த; மதவேழம் - மதயானையானது; கண்நுதல் பொருந்த வரு - சிவன் தன்னிடம் பொருந்த வருகின்ற; கண்ணனின் - திருமால் போல; வரும் - வரும்.
சிவனைத் தன் வலப்பக்கத்தே உடையவன் திருமால். 'வலத்தனன் திரிபுரம் எரித்தவன்' - (திருவாய் 1-3-9). மேனியில் படிந்த பொடியை ஒரு பக்கம் நீக்கி ஒரு பக்கம் மட்டும் அணிந்திருந்த யானை சங்கர நாராயணத் திருக்கோலம் போலத் தோன்றியது என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Rolling down on the earth and rising up toward the high sky,
- it comes like Kaṇṇaṉ with the forehead-eyed god joined to him: having blown away
- on one side the fragrant dust that hid its dark colour,
- the rutting elephant wore white fragrant dust on the other side.
What the poem says
An elephant in rut rolls in the dust and gets up again. It blows the dust off one side of its body with its trunk, so one half of it is dark and the other half white with powder.
The poet sees in this the sacred image of Caṅkara-Nārāyaṇa, in which Viṣṇu, dark-skinned Kaṇṇaṉ, and Civaṉ, the pale god with an eye in his forehead, share one body, each forming one half. A line from the Tiruvāymoḻi is cited, saying that Viṣṇu holds on his right side the god who burned the three cities.